இடப்பற்றாக்குறையான சிறைச்சாலை!

arthur prison
arthur prison

காராஷ்டிராவிலேயே அதிக இடம் பற்றாக்குறையுடன் இருக்கும் சிறைச்சாலை மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலைதான். அனுமதிக்கப்பட்ட கைதிகளுக்கும் மேலாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் காரணம், சுகாதார சீர்கேடு, நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இங்கே 238 வெளிநாட்டு கைதிகளும் அடைக்கப் பட்டுள்ளனர்.

இங்கிலாந்து, பிரேசில், கொலம்பியா, இலங்கை, கென்யா, இந்தோனேஷியா போன்ற பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் மோசடி, போதைப் பொருள் உட்பட பல்வேறு வழக்குகள் காரணமாக இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர்.

மும்பையிலுள்ள மற்ற சிறைகளிலும் இம்மாதிரியான வெளிநாட்டு கைதிகள் உள்ளனர். இவர்களின் வசதிக்காக, கடந்த ஜூன் மாதம் முதல் சிறைத்துறை சார்பில் வீடியோ கால் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2 வாரங்களுக்கு ஒருமுறை 15 நிமிடங்கள், வெளிநாட்டிலிருக்கும் தங்களது உறவினர்கள் மற்றும் குடும்பத்துடன் வீடியோ கால் செய்து பேசிக் கொள்ளலாம்.

மலாவி மாம்பழங்கள்!

ந்தியாவில் மாம்பழ சீசன் என்பது ஏப்ரல் மாதம் முதல் ஜூலை வரையாகும். பலருக்கும் அல்போன்சா மாம்பழம் பிடிக்கும்.

2018ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் அல்போன்சா மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. சீசன் இல்லாத காலங்களில் அல்போன்சா கிடைப்பதில்லை. மலாவி மாம்பழங்கள் அல்போன்சாவிற்கு இணையான ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. ருசியிலும் அல்போன்சா போல இருப்பதால் மக்கள் அதை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

mango fruits
mango fruits

இப்போது கிழக்கு ஆப்பிரிக்காவில் மலாவி மாம்பழ சீசன் என்பதால், வாஷி (நவி மும்பை) ஏபிஎம்சி மார்க்கெட்டிற்கு தற்சமயம் அங்கிருந்து  598 பெட்டிகள் வந்து இறங்கியுள்ளன. ஒரு பெட்டி ` 4,500 முதல்
`5,500வரை விற்பனை செய்யப்படுகிறது.  புனேயைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் 100 பெட்டி மலாவி மாம்பழங்களை வாங்கிச் சென்றுள்ளார். மற்றவைகள் உடனுக்குடன் விற்று காலியகி வருகிறது.

இதையும் படியுங்கள்:
மலைக்க வைக்கும் மாமல்லபுரம்!
arthur prison

அமிதாப்பச்சன், சச்சின் டெண்டுல்கர் வீடுகளுக்கும் மலாவி மாம்பழங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘மகிழ்வு தரும் மலாவி மாம்பழம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com