ஹரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து… 8 பேர் பலி!

Haryana Bus Fire Accident
Haryana Bus Fire Accident

சண்டிகர் மற்றும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 60 பேர் மதுரா மற்றும் விருந்தாவன் கோவில்களுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது பேருந்துத் தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று அதிகாலை பக்தர்கள் கோவிலுக்கு சென்று திரும்பியபோது, ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் குண்ட்லி மனேசார் பல்வால் நெடுஞ்சாலையில் பேருந்து வந்து கொண்டிருக்கையில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஊள்ளூர் மக்கள் பேருந்து தீப்பற்றி எரிவதைக் கண்டு, பேருந்து ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அவர்களைக் கவனிக்காத ஓட்டுநர், பேருந்தைத் தொடர்ந்து ஓட்டியுள்ளார். பின்னர் அந்த கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் பேருந்தை பின் தொடர்ந்து சென்று அதனை நிறுத்தியுள்ளார். தகவலறிந்து அங்கு வந்த போலிஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து பேசிய காவல் கண்காணிப்பாளர் நரேந்திர பிஜரானியா, “இன்னும் உயிரிழந்தவர்களின் அடையாளம் காணப்படவில்லை. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.” என்றார்.

இதன் முதற்கட்ட விசாரணையில், சுற்றுலா பேருந்தில் மொத்தம் 60 பேர் பயணம் செய்தனர் என்றும், அவர்கள் ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா சென்றதும் தெரிய வந்துள்ளது. எனினும், தீவிபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

இதையும் படியுங்கள்:
RCB Vs CSK: பெங்களூரு அணியே வெற்றிபெறும் – பிரையன் லாராவின் கணிப்பு!
Haryana Bus Fire Accident

மேலும் இதுகுறித்து ஹரியானா எம்எல்ஏ அஹமத் கூறியதாவது, “இது மிகவும் வேதனை தருகிற விஷயம். பக்தர்கள் விருந்தாவன் சென்று வருகையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்தில் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் இருந்தார்கள்.”

இந்தச் சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்ததோடு, 24 பேர் படுகாயம் அடைந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால், பலி எண்ணிக்கைக் கூட வாய்ப்புள்ளது என்றும் அஞ்சப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com