RCB Vs CSK: பெங்களூரு அணியே வெற்றிபெறும் – பிரையன் லாராவின் கணிப்பு!

RCB Vs CSK
Virat Kohli

பெங்களூரு அணிக்கும் சென்னை அணிக்கும் இடையே நாளை விறுவிறுப்பான போட்டி நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இது மிகவும் முக்கியமான போட்டி என்பதால், கிரிக்கெட் வட்டாரத்தினர் முதல் ரசிகர்கள் வரை தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் முன்னாள் மேற்கிந்திய தீவின் கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா பெங்களூரு அணியே வெல்லும் என்று கூறியுள்ளார்.

இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி விளையாடியுள்ள 13 போட்டிகளில் 7 வெற்றி, 6 தோல்வி உட்பட 14 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அதேபோல் ஆர்சிபி அணியை பொறுத்தவரை 13 போட்டிகளில் 7 தோல்வி, 6 வெற்றி உட்பட 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு லீக் சுற்றில் இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ளது.

பெங்களூரு அணியுடன் தனது கடைசி லீக் போட்டியில் சிஎஸ்கே அணி மோத உள்ளது. அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி வென்றால், அதிக ரன் ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அதே சமயத்தில் ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசம் அல்லது 11 பந்துகள் மீதம் வைத்து வென்றால் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறமுடியும்.

நடப்பு ஐபிஎல் தொடரில், பெங்களூரு அணியை விட சென்னை அணி சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருந்து வருகிறது. இதுகுறித்து பிரையன் லாரா கூறுகையில் “ஆர்சிபி அணி வெற்றி பெறுவது வெறும் பார்ம் சார்ந்த விஷயம் கிடையாது. அவர்கள் தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றிபெற்று இருக்கிறார்கள். வேறு எந்த அணியும் அவ்வாறு வெற்றிபெறவில்லை. மேலும் அந்த அணியில் விராட் கோலி பயங்கரமான பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். அதேபோல் மற்ற வீரர்களும் தங்கள் ரோல்களை புரிந்து கொண்டு மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள். இதுதான் அவர்களது வெற்றிக்கு காரணம். அவர்கள் இதுவரை ஐபிஎல் தொடரை கைப்பற்றியது கிடையாது.

இதையும் படியுங்கள்:
RCB Vs CSK: மழையால் யாருக்கு லாபம்? ரசிகர்கள் போட்ட கணக்கு!
RCB Vs CSK

எனவே அவர்களிடம் வெல்ல வேண்டும் என்கின்ற பசி இருக்கிறது. சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியை வென்றால், அது அவர்கள் ப்ளே ஆஃப் செல்ல உதவும். இது அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. அந்த அணியின் பார்ம் சிறப்பாக இருக்கிறது. கேப்டன் உட்பட மூத்த வீரர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள். மேலும் இளம் வீரர்களும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றிபெறும்” என்று கூறியிருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com