ஒரு மாணவிக்காக மட்டுமே திறந்துவைக்கப்பட்ட ரயில் நிலையம்… ஜப்பானில் நடந்த சுவாரஸ்யம்!

Japan railway station
Japan railway station
Published on

ஜப்பானில் ஒரு ரயில் நிலையம் ஒரு நபருக்காக மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்ததாகவும், அதன்பின்னர் மூடப்பட்டதாகவும் சொல்லப்படும் ஒரு சுவாரஸ்ய விஷயத்தைப் பற்றியே பார்க்கவுள்ளோம்.

வெகு சிலர் மட்டுமே இருக்கும் கிராமங்களுக்கு பேருந்துக்கூட நிறுத்தவே மாட்டார்கள். அவர்களுக்காக தனியாக நிறுத்த வேண்டுமா என்று பேருந்தை நிறுத்தாமல் செல்வார்கள். ஆனால், சமீபக்காலமாக மூலை முடக்குகளிலெல்லாம் போக்குவரத்து வசதி  வந்துவிட்டது. ஆனால், பேருந்து நிற்காமல் செல்லும் சில இடங்களும் இருக்கின்றன.

பேருந்துக்கே இப்படி என்றால், ரயில் சொல்லவா வேண்டும். அதுவும் ஒரு ஊரில் யாருமே வராத ரயில் நிலையத்தை எவர் திறந்து வைத்திருப்பார்கள். அப்படி திறந்து வைத்திருந்தாலும், ஒரு சில பயணிகளுக்காக வண்டியை நிறுத்துவார்களா என்ன?

 நிறுத்திருக்கிறார்களே! ஜப்பானில் ஹொக்கைடோ என்ற இடத்தில் க்யூ-ஷிரடகி (kyu-Shirataki) என்ற ரயில் நிலையத்தை ஒரு மாணவிக்காக இயக்கியிருக்கிறார்கள்.

ஒருகட்டத்தில் பயணிகளே வரவில்லை. அதேபோல், அந்த ரயில் ஒரு சில இடத்தில் மட்டுமே நிற்கும். அதில் இந்த ரயில் நிலையமும் ஒன்று. ஆகையால் அந்த ரயில் நிலையத்தை மூட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அப்போது ரிபோர்ட் எடுத்துப் பார்க்கும்போது ஒரே ஒரு பெண் மட்டும் தினமும் ஒரு நேரத்தில் வந்துப் போகிறார் என்ற விஷயம் தெரிய வந்தது. அந்த பெண் ஒரு மாணவி என்பதும் தெரியவந்ததால், அந்த முடிவு கைவிடப்பட்டது. அந்த மாணவி பள்ளி முடிக்கும்வரை அந்த ரயில் நிலையம் மூடப்படாது என்று முடிவெடுக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
News 5 – (30.09.2024) சச்சினின் சாதனையை முறியடித்த கோலி!
Japan railway station

அதேபோல், அங்கு -20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியதால், நடை மேடைகளில் பனி சூழும். அப்போது அந்த பெண்ணின் அப்பா உட்பட சிலர் சேர்ந்து அதனை அகற்றி வந்திருக்கிறார்கள். அந்த ஒரு ரயில் நிலையம் அந்த ஒரு பெண்ணுக்காக மட்டும் பல வருடங்களாக இயங்கி வந்தது. சரியாக, 2016ம் ஆண்டு மார்ச் மாதமே அந்த பெண் பள்ளி படிப்பை முடித்ததும், அந்த ரயில் நிலையம் மூடப்பட்டது.

பாருங்களேன், 10 பேர் இருந்தாலே ஒரு ரயில் நிலையத்தில் இறங்கிப் பேருந்து பிடித்து அடுத்த நிறுத்தத்திற்கு செல்லுங்கள் என்று சொல்பவர்களுக்கு நடுவில், ஒரு பெண்ணின் படிப்பிற்காக ஒரு ரயில் நிலையமே திறந்துவைக்கப்பட்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com