News 5 – (30.09.2024) சச்சினின் சாதனையை முறியடித்த கோலி!

News 5
News 5

1. டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க்!

Facebook founder Mark
Facebook founder Mark

உலகளவில் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் 4வது இடம் பிடித்துள்ளார். ‘புளும்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ்’ வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், 200 மில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களைக் கொண்ட பணக்காரர்கள் பட்டியலுக்குள் நுழைந்து, உலகின் 4வது மிகப்பெரிய பணக்காரராக உருவெடுத்துள்ளார் மார்க் ஜூக்கர்பெர்க்!

2. வாகனக் கடன்களுக்கான தேவை கடந்த 4 மாதங்களில் அதிகரிப்பு!

Auto loans has increased
Auto loans has increased

இந்தியாவில் தனிநபர் மற்றும் வாகனக் கடன்களுக்கான தேவை கடந்த 4 மாதங்களில் 12 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் கிரெடிட் கார்டுகளால் அதிகமான அளவிற்கு கடன் வழங்கப்படுவதாக Team lease ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

3. யானை சின்னம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சி எழுப்பிய ஆட்சேபணைக்கு தேர்தல் ஆணையம் பதில்!

TVK
TVK

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றிருப்பது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி எழுப்பிய ஆட்சேபணைக்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. ‘கட்சிகளின் கொடிகளுக்கும், அதில் இடம்பெற்றிருக்கும் உருவங்களுக்கும் ஒப்புதலோ, அங்கீகாரமோ அளிப்பது தேர்தல் ஆணையம் இல்லை’ என விளக்கம்அளித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
News 5 – (30.09.2024) வெயில் கொளுத்தும் நிலையில், மழைக்கு வாய்ப்பு!
News 5

4. 'வேட்டையன்' படத்தின் ட்ரெய்லர் அப்டேட்!

'Vettaiyan' movie
'Vettaiyan'

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரவுள்ள 'வேட்டையன்' படத்தின் ட்ரெய்லர் வரும் 2ம் தேதி வெளியாகும் என அப்படக்குழு அறிவித்துள்ளது.

5. சச்சினின் சாதனையை முறியடித்த கோலி!

Virat Kohli
Virat Kohli

சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்களைக் கடந்தார் கிங் கோலி. அதிவேகமாக 27,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சச்சினின் சாதனையை (623 இன்னிங்ஸ்) இவர், 594* இன்னிங்ஸ் ஆடி முறியடித்தார்.

logo
Kalki Online
kalkionline.com