பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சென்னை கோட்ட பெண் ரயில் ஓட்டுநர்!

Aishwarya S.Menon
Aishwarya S.Menonhttps://tamil.asianetnews.com

டைபெற்று முடிந்திருக்கும் 18வது மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்க உள்ளார்.

இந்தப் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, சென்னை கோட்டத்தை சேர்ந்த ரயில்வே பெண் ஓட்டுநர் (லோகோ பைலட்) ஐஸ்வர்யா என்.மேனனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. லோகோ பைலட் ஐஸ்வர்யா வந்தே பாரத் மற்றும் ஜன சதாப்தி போன்ற முன்னணி ரயில்களை இதுவரை 2 லட்சம் மணி நேரத்துக்கும் மேல் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்க இருக்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் நாட்டின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ள வேண்டி அழைப்பு அனுப்பப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில்தான், இந்த முக்கியமான விழாவில் பங்கேற்க சென்னை கோட்டத்தின் ரயில்வே பெண் ஓட்டுநர் (லோகோ பைலட்) ஐஸ்வர்யா எஸ்.மேனனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
‘பாஜகவுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை’ வானதி சீனிவாசன் அறிக்கை!
Aishwarya S.Menon

“இவர் சென்னை - விஜயவாடா, சென்னை - கோவை பிரிவில் தொடக்க நாள் முதற்கொண்டே 'வந்தே பாரத்' ரயில்களை இயக்கிப் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது” என, மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். ரயில்வே சமிக்ஞைகளை (சிக்னல்கள்) உடனடியாக உள்வாங்கும் இவரது திறமை ரயில்வே அதிகாரிகளால் பெரிதும் பாராட்டப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com