மலைப்பாம்பினால் உயிருடன் விழுங்கப்பட்ட பெண்… இந்தோனேஷியாவில் பரபரப்பு! 

Anaconda
Anaconda

இந்தோனேசியாவைச் சேர்ந்த 45 வயது பெண்ணை மலைப்பாம்பு ஒன்று உயிருடன் விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அந்த பாம்பின் வயிற்றை கிழித்து அப்பெண்ணின் சடலத்தை வெளியே எடுத்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பாம்பிலேயே மிகப்பெரிய பாம்பு என்றால் அவை மலை பாம்புகள்தான். அந்த பாம்புகள் மனிதர்களை ஒழுங்கும் காட்சிகளை எல்லாம் சினிமாவில்தான் பார்த்திருப்போம். ஆனால் இந்தோனேசியாவில் இதுபோன்ற சம்பவங்கள் சாதாரணமாகவே நடக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் தொடர்ச்சியாக மனிதர்கள் மலைப்பாம்புகளுக்கு இரையாகும் சோகம் நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து தற்போது மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. இந்தோனேஷியாவின் சுலவேசி மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

மலைப்பாம்பினால் விடுங்கப்பட்டு உயிரிழந்த 45 வயது மதிக்கத்தக்க பரிதா என்ற பெண் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அப்பகுதியில் வசித்து வந்துள்ளார். கடந்த 6ம் தேதி முதல் ஃபரிதா காணாமல் போன நிலையில், கிராமத்தினருடன் இணைந்து கணவர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார். எங்கு தேடியும் தனது மனைவியை கண்டுபிடிக்க முடியவில்லை. 

இருப்பினும் மனம் தளராமல் காட்டுப்பகுதிக்குள் சென்று கிராமவாசிகள் தேடியபோது அவரது மனைவி பயன்படுத்திய கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்போது அதன் அருகில் 16 அடி நீள பாம்பு ஒன்று எதையோ விழுந்துவிட்டு நகர முடியாமல் படுத்திருந்திருக்கிறது. பின்னர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, சந்தேகத்தின் பேரில் பாம்பின் உடலை கிழித்துப் பார்த்தபோது, ஃபரிதா பாம்பின் வயிற்றில் சடலமாகக் கிடந்துள்ளார். 

இதையும் படியுங்கள்:
குடும்ப உறுப்பினர்களிடம் இந்த விஷயங்களை ஒருபோதும் மறைக்காதீர்கள்… மீறி மறைத்தால்? 
Anaconda

இந்த சம்பவம் தற்போது இந்தோனேஷியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் பேசுகையில், “அந்தப் பெண்ணை விழுங்கிய பாம்பு உலகின் மிக நீளமான பாம்புகளில் ஒன்றாகும். இந்த பாம்புகளுக்கு விஷம் கிடையாது. பெரிய இரையை இவற்றால் விழுங்க முடியும். இந்த பாம்புகள் மனிதர்களை விளங்குவது அபூர்வமானதுதான் என்றாலும், வாய்ப்பு கிடைத்தால் அவை மனிதர்களை சாப்பிடத் தயக்கம் காட்டுவதில்லை. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற நாங்கள், அதைப் பார்த்தவுடன் கண்டுபிடித்து விட்டோம். இருப்பினும் அதன் வயிற்றில் இருப்பது யார் என்பதைக் கண்டறிய பாம்பின் உடலை வெட்டியபோது அதில் பரிதாவின் சடலம் இருந்தது.” 

மலைப்பாம்பின் வயிற்றில் பெண்ணின் சடலம் இருந்த சம்பவம் தற்போது இந்தோனேஷியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com