

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வழங்கப்படும் 12 இலக்க தனித்துவ அடையாள எண்ணான ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பிற தனிப்பட்ட அடையாள ஆவணங்கள் போன்ற நாட்டில் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகிவிட்டது. பல்வேறு அரசு திட்டங்கள் மற்றும் பிற சேவை பயன்பாடுகளை அணுகுவதற்கு இது கட்டாயமாக உள்ளது. பல்வேறு நோக்கங்களுக்காக ஆதார் அட்டையின் செயல்படுத்தல் அதிகரித்து வருவதால், ஆதார் ஆபரேட்டர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் வேலைவாய்ப்புகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.
2025–26-இல் காலியாக உள்ள Aadhaar Supervisor/ Operator (ஆதார் சூப்பர்வைசர்/ஆபரேட்டர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.01.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
நிறுவனம் : இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI)
வகை : மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 282
பணியிடம் : இந்தியா
ஆரம்ப நாள் : 27.12.2025
கடைசி நாள் : 31.01.2026
பணியின் பெயர்: Aadhaar Supervisor/ Operator (ஆதார் மேற்பார்வையாளர்/ ஆபரேட்டர்)
சம்பளம்: Rs.20,000/-
கல்வி தகுதி:
12-ஆம் வகுப்பு தேர்ச்சி (அல்லது)
10-ஆம் வகுப்பு + 2 ஆண்டுகள் ITI (அல்லது)
10-ஆம் வகுப்பு + 3 ஆண்டுகள் Polytechnic Diploma
UIDAI அங்கீகாரம் பெற்ற Testing & Certifying Agency மூலம் வழங்கப்பட்ட Aadhaar Operator / Supervisor Certificate விண்ணப்பதாரரிடம் கட்டாயமாக இருக்க வேண்டும்.
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 282
மாநில வாரியாக காலியிடங்கள்:
ஆந்திர பிரதேசம் 04
அசாம் 03
லடாக் 01
பீகார் 04
சண்டிகர் 01
சத்தீஸ்கர் 08
கோவா 06
குஜராத் 10
ஹரியானா 07
ஜம்மு & காஷ்மீர் 09
ஜார்கண்ட் 07
கர்நாடகா 10
கேரளா 11
மத்திய பிரதேசம் 28
மகாராஷ்டிரா 20
நாகாலாந்து 01
ஒடிசா 02
புதுச்சேரி 01
பஞ்சாப் 12
ராஜஸ்தான் 04
சிக்கிம் 01
தமிழ்நாடு 03
தெலுங்கானா 11
திரிபுரா 01
உத்தர பிரதேசம் 23
உத்தரகண்ட் 03
மேற்கு வங்காளம் 05
மேகாலயா 01
District Level Manpower 98
மொத்தம் 282
வயது வரம்பு: ஆதார் துறை வேலைவாய்ப்பு 2026 ஆதார் ஆபரேட்டர்/மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 27.12.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2026
விண்ணப்பிக்கும் முறை:
ஆதார் துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 27.12.2025 முதல் 31.01.2026 தேதிக்குள் https://cscspv.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.