உடனே விண்ணப்பீங்க..! பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு..!

BANK
BANK
Published on

பெடரல் வங்கியில் (Federal Bank) காலியாக உள்ள பல்வேறு அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விரிவான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் : Federal Bank

வகை : வங்கி வேலை

காலியிடங்கள் : பல்வேறு

பணி : அலுவலக உதவியாளர் (Office Assistant)

பணியிடம் : இந்தியா முழுவதும்

ஆரம்ப தேதி : 30.12.2025

கடைசி தேதி : 08.01.2026

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர் (Office Assistant)

சம்பளம்: மாத சம்பளமாக ரூ. 19,500 முதல் ரூ. 37,815 வரை வழங்கப்படும். அடிப்படைச் சம்பளம் தவிர வங்கியின் விதிமுறைப்படி கூடுதல் சலுகைகள் மற்றும் இதர படிகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.

காலியிடங்கள்: பல்வேறு காலியிடங்கள்

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டம் (Graduation) படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியில்லை.

குறிப்பு: இப்பணிக்கு பட்டம் (Graduation) பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியில்லை.

வயது வரம்பு:

  • ஆதிதிராவிடர் / பழங்குடியினர் (SC / ST): 18 முதல் 25 வயது வரை.

  • இதர பிரிவினர் (Others): 18 முதல் 20 வயது வரை.

விண்ணப்ப கட்டணம்:

  • SC/ST – Rs.100/-

  • Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  • Online Aptitude Test

  • Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.12.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.01.2026

தேர்வு தேதி: 01.02.2026

விண்ணப்பிக்கும் முறை:

பெடரல் வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 30.12.2025 முதல் 08.01.2026 தேதிக்குள் www.federalbank.co.in இணையதளத்தில் சென்று “ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Step 1: www.federalbank.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

Step 2: Office Assistant தொடர்புடைய வேலைவாய்ப்பு அறிவிப்பை தேர்வு செய்யவும்.

Step 3: அறிவிப்பை முழுமையாக வாசித்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் தங்களிடம் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Step 4: பின்னர் Apply பட்டனை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

இதையும் படியுங்கள்:
புகை பிடிப்பவர்களுக்கு ஷாக்..! பிப். 1 முதல் அதிரடியாக உயர போகும் விலை..!
BANK

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com