OTP இல்லாமலே பணம் அபேஸா! பலே மோசடி பேர்வழிகள்... திணறும் சைபர் கிரைம்!

OTP இல்லாமலே பணம் அபேஸா! பலே மோசடி பேர்வழிகள்... திணறும் சைபர் கிரைம்!
Published on

ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டம் சின்ன சவுக் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர ரெட்டி. இவருடைய வங்கி கணக்கில் இருந்து திடீரென்று 89, 550 ரூபாய் காணாமல் போனது. இது குறித்து பதறி போன ராஜசேகர ரெட்டி சின்ன சவுக் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பல திடுக்கிடும் தகவல்களை கண்டு பிடித்துள்ளனர். புகாரில் ராஜசேகர ரெட்டி தனக்கு இது குறித்து எந்த ஓடிபி நம்பரும் குறுஞ்செய்தியாக வரவில்லை என்றும், தான் யாருக்கும் ஓடிபி நம்பரை பகிரவில்லை என்றும் பாதிக்கப்பட்ட அவர் போலீசாரிடம் தெரிவித்திருந்தார்.

இது குறித்த தீவிர விசாரணையில் இது போன்ற சைபர் கிரைம் மோசடிகள் உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியில் அதிக அளவில் நடைபெறுவதை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கு சென்ற போலீசார் சைபர் கிரைம் மோசடியில் ஈடுபட்டு வரும் அந்தப் பகுதியை சேர்ந்த சேஷ நாத் சர்மா என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் போலீசாரே அதும் அளவுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

cash
cash

ஆன்லைன் மூலம் பொதுமக்களின் கைரேகைகளை தரவிறக்கம் செய்து, அதன் மூலம் ஆதார் தரவுகளைக் கொண்டு வங்கி சேமிப்புகளை சுருட்டியது தெரிய வந்துள்ளது. ஒருவருடைய ஆதார் எண்ணையும், கைரேகையையும் வைத்து அவரது வங்கியிலிருந்து பணத்தை மற்றொரு வங்கிக் கணக்கிற்கு மாற்ற முடியும். வங்கி சேவை இல்லாத குக்கிராம மக்களுக்கு பயன்படும் என்பதால் இந்த சேவையை அரசு அனுமதித்துள்ளது.

இதைப் பயன்படுத்தி AEPS என்ற செயலி மூலம் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை இதுவரை சேஷ நாத் சர்மா சுருட்டியது தெரிய வந்தது. இதற்காக IGRS என்ற தளத்திலிருந்து ஒரு லட்சம் வாடிக்கையாளர்களின் கைவிரல் ரேகை பதிவுகளை தரவிறக்கம் செய்து சேகரித்து வைத்திருப்பதும் தெரிய வந்தது. இந்த பலே வகை மோசடி ஆசாமிகளை அமுக்குவது எப்படி? என போலீசாரே விழிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com