கனரக லாரிகளில் இனி ஏசி கட்டாயம்: மத்திய போக்குவரத்து துறையின் அதிரடி முடிவு!

கனரக லாரிகளில் இனி ஏசி கட்டாயம்: மத்திய போக்குவரத்து துறையின் அதிரடி முடிவு!
Published on

போக்குவரத்தை பொருத்தே ஒரு நாட்டினுடைய வளர்ச்சி தீர்மானிக்கப்படுகிறது. இந்தியாவின் போக்குவரத்தில் முக்கிய பங்காற்றுவது சாலைப்போக்குவரத்து. பல்வேறு தட்பவெட்ப நிலையை கொண்ட இந்தியா போன்ற ஒரு நாட்டில் நெடுந்தூர பயணம் என்பது அத்தனை எளிதானது அல்ல. ஆனாலும் சரக்குகளை ஏற்றி சொல்லும் கனரக லாரிகள் தினம் தினம் பல்வேறு பருவம் நிலை மாற்றங்களை சந்தித்துக் கொண்டு பயணங்களை மேற்கொள்கின்றன. இந்த பயணங்களின் போது பெரும் சிரமத்திற்கு உள்ளாவது லாரி டிரைவர்கள் தான்.

லாரி டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் சந்திக்கும் சிரமங்களை பட்டியலிட்டால் அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த நிலையில் இந்திய அரசும், மத்திய சாலைப் போக்குவரத்து துறையும் இந்தியாவில் பயன்படுத்தப்படும் என் 2 மற்றும் என் 3 வகை கனரக லாரிகளில் இனி ஏசி கட்டாயம் என்ற புதிய அதிரடி முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் என் 1 ரக லாரிகள் 3.5 டன் சரக்குகளை ஏற்றக்கூடியவை, இவை தொலைதூர பயணத்தை பெருமளவில் மேற்கொள்வதில்லை. இதனால் இவ்வகை வாகனங்களை தவிர்த்து 12 டன் சரக்குகளை ஏற்றக்கூடிய என் 2 ரக லாரிகளுக்கும், 12 டன்னுக்கு அதிகமாக சரக்குகளை எடுத்துச் சென்று தொலைதூர பயணத்தை மேற்கொள்ளும் என் 3 ரக லாரிகளுக்கும் ஏசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பது, இந்தியாவில் மிக நீண்ட தொலைவுகளுக்கு பயணம் செய்யும் கனரக லாரிகளான என் 2 மற்றும் என் 3 லாரிகளின் டிரைவர் மற்றும் கிளீனர் பயன்படுத்தும் இடங்களில் ஏசி கட்டாயம் வைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்காற்றும் லாரி டிரைவர்கள் மற்றும் கிளீனர்களின் சுமை குறைய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதுகுறித்து கனரக லாரிகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கான முறையான அறிவிப்பு வழங்கப்பட உள்ளது. 2025 ஜனவரி மாதம் முதல் இவ்வாறான லாரிகளின் பயன்பாடு இந்தியாவில் அமல்படுத்தப்படும், அதற்கான பணியை லாரி நிறுவனங்கள் மேற்கொள்ள இருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com