நான் அரசியல் பேசுவதற்கு இதுதான் காரணம் என நடிகர் பிரகாஷ் ராஜ் பளீச் என விளக்கம் கொடுத்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழா சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் பிரகாஷ்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் அருள்மொழி, இந்திய சமூக நீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா முன்னாள் மாநிலத் தலைவர் எஸ்.என்.சிக்கந்தர், கல்வெட்டியல் அறிஞர் எ.சுப்பராயலு ஆகியோருக்கு விசிக தலைவர் திருமாவளவன் விருதுகளை வழங்கினார்.
அந்த விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது. விருது வாங்கிய பின்பு பேசிய அவர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய பிரகாஷ் ராஜ், தான் அரசியல் பேசுவருதற்கு முக்கியமான காரணம் என்ன என்பது குறித்து புரியும் வகையில் எளிமையான விளக்கத்தை கொடுத்தார். அவர் பேசுகையில், “ஒரு கட்சி சார்ந்து இருப்பது தனக்கு பிடிக்காத விஷயம் என்றும், ஆனால் இன்று இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்க காரணம், நான் போராடும் கொள்ளகைக்காக போராடும் நீங்களும் உங்கள் கட்சியும் என்னுடைய தோழர்கள் என்று திருமாவளவனை நோக்கி கூறினார்.
மேலும், கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் நடந்த அவலங்கள் குறித்து தான் பேசி வருவதாக குறிப்பிட்ட பிரகாஷ் ராஜ், தாம் தெய்வக் குழந்தை என பிரதமர் பேசியிருந்த நிலையில் அவரை மறைமுகமாக மன்னர் என விமர்சித்தார், மோடி ஒரு டெஸ்ட் டியூப் பேபி என்றும் குறிப்பிட்டார்.
மோடியை கொஞ்சம் பாருங்களேன்... ஒரு ஃபாசிஸ்ட். ஒரு சர்வாதிகாரி. அவர் தேரில் தான் நிற்பார். விமானத்தில் தான் வருவார், மக்கள் பூ போடுவார்கள். அவர் மக்கள் பக்கத்தில் நிற்க மாட்டார். மக்கள் வேலிக்கு அந்த பக்கம் நிற்பார்கள். அவர் தெய்வ மகன் கிடையாது. டெஸ்ட் டியூப் பேபி என கடுமையாக விளாசியுள்ளார்.