"வென்று வா தலைவா"... நாங்க இருக்கோம் : விஜய்க்கு ஆதரவாக சிபி சத்யராஜ் கடிதம்..!

sibi - vijay
sibi - vijay
Updated on

சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில் இணைந்துள்ள நிலையில் அவரது மகன் சிபி சத்யராஜ் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 

நடிகர் சத்யராஜின் மகனும், நடிகருமான சிபி சத்யராஜ் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு ஆதரவாகவும், அவரை ஊக்குவிக்கும் வகையிலும் சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்துள்ளார்."வென்று வா தலைவா! நாங்க இருக்கோம்"என தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் சிபி சத்யராஜ் கடிதம் எழுதியுள்ளார்.

சிபி சத்யராஜ் விஜய் அரசியலில் நுழைந்ததிலிருந்தே அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார். விஜய்க்கு எதிரான விமர்சனங்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மற்றும் ட்விட்டர் மூலம் பதிலடி கொடுத்து வருகிறார். கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் மற்றும் விஜயின் அரசியல் நகர்வுகள் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு இவர் தொடர்ச்சியாக ஆதரவு வீடியோக்களையும், பதிவுகளையும் பகிர்ந்து "நாங்க இருப்போம்" என்ற செய்தியை விஜய் ரசிகர்களுக்கு கடத்தியுள்ளார்.

ஒருவாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்! இது வெறும் ஒரு திரைப்பட வசனம் மட்டுமல்ல; நீங்கள் வாழ்ந்து காட்டும் வாழ்க்கை தத்துவமே இது! வென்று வா தலைவா! நாங்க இருக்கோம் என சிபி சத்யராஜ் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
அண்ணா அறிவாலயத்தில் வார் ரூம் அமைப்பு - திமுக..!!
sibi - vijay

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com