

மதுரை பாலமேட்டில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது. ஜல்லிகட்டிற்காக 1000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டது.ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஜல்லிக்கட்டில் நடிகர் சூரியின் மாடு பங்கேற்றது. போட்டியை கண்டுகளிப்பதற்காக ஜல்லிக்கட்டு அரங்கத்துக்கு வருகை தந்த நடிகர் சூரி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு காளை சிற்பத்தை நினைவுப்பரிசாக வழங்கினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் சூரி பேசியதாவது: "ஜல்லிக்கட்டு கலாசாரம் தற்போது மீண்டும் எழுச்சிபெற்று சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. பாலமேடு ஜல்லிக்கட்டு சென்ற வருடத்தைவிட இந்த வருடம் இன்னும் சிறப்பாகவே நடைபெற்று வருகிறது.” என்றார்.
இந்த ஜல்லிக்கட்டில் 2வது சுற்று தொடங்கிய நிலையில், நீள நிற உடையில் வீரர்கள் களமிறங்கினர். 2ம் சுற்று முடிவில் மொத்தம் 195 மாடுகள் களமிறங்கிய நிலையில், 25 மாடுகள் பிடிபட்டுள்ளது. இதில், 5 வீரர்கள் தலா 1 மாடு மட்டுமே பிடித்துள்ளதால் யாரும் இந்த சுற்றில் தகுதி பெறவில்லை.நடிகர் சூரியின் மாடு களமிறக்கப்பட்டுள்ள நிலையில் வீரர்களை மிரட்டி விட்டு வெற்றி பெற்றது.