அரசியல் இப்ப வேணாம் நடிகர் விஜய்... !

அரசியல் இப்ப வேணாம் நடிகர் விஜய்...  !
Updated on

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்குகிறார். இதற்கான நிகழ்ச்சி நீலாங்கரையில் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஜய். இவர் தற்போது அரசியலிலும் விரைவில் நுழைவார் என்று சில காலமாகவே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதிலும் அவரது 70வது படம் முடிந்த பின்பு அவர் அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 10 மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வில், தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெற்று வருகிறது. அவர்களை சந்தித்து தளபதி விஜய் ஊக்கத்தொகை வழங்கி உள்ளார்.

நிகழ்ச்சிலிருந்து சில துளிகள் ...

மாநில அளவில் இரண்டாவது மதிப்பெண் பெற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து பரிசளித்தார் விஜய்

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.

மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் விஜய் அரசியல் பற்றி சூசகமாக சில விஷயங்களை பேசியுள்ளார்.

ஓட்டுக்கு காசு வாங்க கூடாது என்று பெற்றோரிடம் கூறுங்கள் என்று மாணவர்களிடம் பேசினார்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்தார்.வைர நெக்லஸை மாணவியின் தாயாரிடம் கொடுத்து, அதனை அணிவிக்க செய்து பார்த்தார்.

அம்பேத்கர், பெரியார், காமராஜர் பற்றி படிங்க, தெரிஞ்சுக்கங்க என்றார் விஜய்

நீங்க தான் நாளைய வாக்காளர்கள் காசு வாங்கீட்டு ஓட்டு போடாதீர்கள் என மாணவர்களை கேட்டு கொண்டார்.

கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய நடிகர் விஜய் என்னுடைய கனவு எல்லாம் சினிமா நடிப்பு தான் ஒரு வேளை ......அதை விடுங்க அது இப்ப எதுக்கு வேணாம் என பேசியது, நடிகர் விஜய் அரசியலுக்கு இப்போது வர போவதில்லை என சூசகமாக அறிவித்ததார். அடடா ! தளபதி அரசியலுக்கு வருவார் என கருதி செலவு செய்தது வீணாகப் போச்சே என மன்ற நிர்வாகிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com