

ஹெச்.வினோத் இயக்கியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வரும் ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் படத்தை தயாரித்தது.
வசூலில் மிகப்பெரிய சாதனைபடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களினால் ஜனநாயகம் திரைப்படம் தள்ளிவைக்கப்படுவதாக படதயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. புதிய தேதி விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளது.