நடிகை மீனாவிற்கு அடித்தது ஜாக்பாட்..! 10 கோடிக்கு வாங்கிய வீட்டை 100 கோடிக்கு விற்ற சாதுர்யம்..!

actress meena
actress meena
Updated on

80 - 90ஸ் திரைப்பட ரசிகர்களின் கனவு கன்னியாக முன்னணி நடிகையாக விளங்கியவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் ஜோடியாக நடித்ததுடன் பின் நாட்களில் வெவ்வேறு குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்து திரையுலகில் தன்னை நிலைநாட்டிக் கொண்டவர் .

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் மீனா  மோகன்லால் ஜோடியாக மலையாளத்தில் நடித்த த்ரிஷ்யம் 3 திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரது அழகிய கண்களுக்கும்,புன்னகைக்கும் பெண்கள் முதல் ரசிகர் ஆனவர்கள் அநேகம் பேர் . அழகு இருந்தால் புத்திசாலித்தனம் இருக்காது எனும் பொதுவான கருத்தை மாற்றி இருக்கிறார் நடிகை மீனா. ஆம். 10 கோடி ரூபாய் முதலீட்டில் அவர் கட்டிய பங்களாவை தற்போது 100 கோடி ரூபாய்க்கு விற்று புத்திசாலித்தனமாக அசத்தி இருக்கிறார்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் சம்பாதித்த பணம் மற்றும் வங்கியில் கடனைப் பெற்று  தமிழ்நாட்டில் ஒரு பிரமாண்டமான பாரம்பரிய பங்களா கட்டினார். இத்தொகை அந்நாளில் மிகப் பெரிய ரிஸ்க் என கருதப்பட்டது. மேலும் அவ்வளவு பெரிய தொகையை சொகுசு வாழ்க்கைக்கு பயன்படுத்தாமல் நிலையான சொத்து முதலீட்டாக வீடு கட்டத் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

அன்று அவர் எடுத்த ஒரு முடிவு இன்று அவருக்கு 10 மடங்கு லாபத்தை கொடுத்துள்ளது. பாரம்பரிய கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் செதுக்கப்பட்ட மரத் தூண்கள், விசாலமான நடுமுற்றம் மற்றும் அரண்மனை பாணி வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள அந்த பங்களாவின் தனி மதிப்பு மற்றும் புராதன அழகைக் கண்ட வெளிநாட்டு தம்பதி அதை 100 கோடி தந்து விலைக்கு வாங்கியதாக தகவல்கள் கூறுகின்றன.மீனா இந்தச் செய்தியை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் இது உண்மை என ஊடகத் தகவல் கூறுகிறது


அன்று 10 கோடி ரூபாய் கடன் வாங்கி அழகான பங்களாவைக் கட்டிய நடிகை மீனா அதை இன்று 100 கோடி ரூபாய்க்கு விற்று புத்திசாலித்தனமான முதலீட்டாளர் என்று பெயரை திரையுலகினர் இடையே பெற்றிருக்கிறார்.

சமீபத்தில் தனது காதல் கணவரை இழந்து அதிலிருந்து சிறிது சிறிதாக மீண்டு தனது மகளை வளர்த்து வரும் நிலையில் மீனாவின் இந்த முதலீடு அவர்களின் எதிர்காலத்துக்கு பெரிதும் உதவும். மீனாவின் மகள் நைனிகா, தெறி படத்தில் நடிகர் விஜய்யின் மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இதையும் படியுங்கள்:
உதகையில் அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை..!
actress meena
logo
Kalki Online
kalkionline.com