உதகையில் அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை..!

annamalai
annamalai source:dailythanthi
Published on

உதகையில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை அவர்கள் சென்ற ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று சோதனை செய்தனர். 

சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் ஒவ்வொருவரும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் உதகையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் போஜராஜனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக பிரச்சாரம் மேற்கொள்வதற்கு ஹெலிகாப்டர் மூலம் அண்ணாமலை சென்றுள்ளார்.

அண்ணாமலை வந்திறங்கிய ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் 10 நிமிடங்கள் சோதனை செய்தனர்.

இந்த சோதனைக்கு அண்ணாமலை முழு ஒத்துழைப்பு அளித்தார். அதன் பின்பு அண்ணாமலை அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அதே போல் இன்று தவெக தலைவர் விஜய் பிரச்சார வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதற்கு முன்னதாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களின் கார்கள், பிரச்சார வாகனங்களையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர் எனப்து குறிப்பிடத்தக்கது

இதையும் படியுங்கள்:
ஜனநாயகன் படத்தை இணையத்தில் பார்த்தால் ஒவ்வொரு நபர் மீதும் நடவடிக்கை பாயும் - படக்குழு எச்சரிக்கை..!
annamalai

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com