ஆந்திர மாநிலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள நடிகை ரோஜா, கடற்கரையில் இறங்கியபோது, அவருடைய கால் செருப்பை ஊழியரை விட்டு எடுக்க வைத்த சம்பவம் பரபரப்பாகிவருகிறது. அது குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். நடிகையும், ஆந்திர அமைச்சருமான ரோஜா ஆய்விற்கு சென்றார் . அப்போது தனது காலணியை கழற்றி விட்டு அதனை ஊழியரை எடுக்க சொல்லும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது
80 ம ற்றும் 90 களில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா, சமீபகாலமாக, தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய ரோஜா, தற்போது ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள பாபட்லா சூர்யலங்கா கடற்கரைக்கு இன்று அமைச்சர் ரோஜா சென்றிருந்தார்.
சுற்றுலா துறை அமைச்சர் என்ற முறையில் தன்னுடைய துறை தொடர்பான அபிவிருத்தி பணிகளை பார்வையிட நேற்று ரோஜா ஆந்திராவின் பாபட்லா மாவட்டத்தில் உள்ள சூரியலங்கா கடற்கரைக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.
செருப்பு காலுடன் கடற்கரை மணலில் நடப்பது அவருக்கு சிரமமாக இருந்ததாக கூறப்படுகிறது. எனவே கடற்கரையில் ஓரிடத்தில் தன்னுடைய சிறப்புகளை ரோஜா கழற்றி விட்டுள்ளார். அதன்பின் அந்த இரண்டு செருப்புகளும் உதவியாளர் ஒருவரின் கையில் இருந்தன.
இந்த நிலையில் செருப்புகளை கழற்றிவிட்ட ரோஜா அந்த செருப்புகளை தூக்கி வருமாறு அவரிடம் கூறியதாக கூறப்படுகிறது. சாதாரண குடும்பத்தில் பிறந்து, நடிகையாக வளர்ந்து, எம்எல்ஏவாக உயர்ந்து தற்போது அமைச்சராக இருக்கும் அவர் இது போல் செய்யலாமா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இது குறித்த சில காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியானபோது நெட்டிசன்கள் பலர் ஒரு அமைச்சராக இருந்தாலும், ஊழியரை வைத்து செருப்பை பிடிக்க செய்வது ஏற்க முடியாத செயல் என விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அமைச்சர் என்பதற்காக சக மனிதனை, காலணியை எடுத்துவருமாறு கூறுவது மிகவும் தவறு எனவும், இவ்வாறு நடந்ததை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் மக்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர்.