#BIG BREAKING : பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்..!

சென்னை காவேரி மருத்துவமனையில் நடிகை சௌகார் ஜானகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் காலமானார்.
சௌகார் ஜானகி
சௌகார் ஜானகி காலமானார்
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

1950 மற்றும் 60-களில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்தவரும், தென்னிந்திய சினிமாவின் மூத்த நடிகைகளில் ஒருவருமான சௌகார் ஜானகி, வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

ஆந்திராவில் பிறந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என சினிமாவில் கோலோச்சிய பழம்பெரும் நடிகைதான் சௌகார் ஜானகி.

இவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் வயது மூப்பு காரணமாக கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். 94 வயதாகும் அவருக்கு சில தினங்கள் முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்களும், அரசியல் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

2020ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான ‘பிஸ்கோத்’ என்ற தமிழ் படமும், தெலுங்கில் 2023-ல் வெளியான 'அன்னி மாஞ்சி ஸகுனாமுலே' (Anni Manchi Sakunamule) என்ற படமும் தான் சௌகார் ஜானகி நடிப்பில் வெளிவந்த கடைசி படமாகும்.

கன்னட மொழி பேசும் குடும்பத்தில் டிசம்பர் 12, 1931-ஆம் ஆண்டு பிறந்த நடிகை சௌகார் ஜானகி, அன்றைய கால கட்டத்தில் சினிமாவில் ஆண்களே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தபோது, தான் தோன்றிய ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தன்னுடைய தனித்திறமையை காட்டி ரசிகர்களால் கைதட்டுகளை பெற்றார்.

சினிமா  புகழின் உச்சியில் தான் இருக்கையில் டைரக்டர் கே. பாலசந்தர் மூலமாக நாடகங்களுக்கு நடிக்க வந்தார்.

Sowcar Janaki in Partha nyabagam illaiyo song
சௌகார் ஜானகி

ஜானகி 3,000-ற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். கலைத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்புகள் ஏராளம்.

பின்னர் தெலுங்கில் எல்.வி.பிரசாத் இயக்கத்தில் கடந்த 1950ஆம் ஆண்டு வெளியான ‘சவுகாரு’ திரைப்படத்தில் ஜானகி அறிமுகமானதால், அதன்பிறகு ‘சௌகார் ஜானகி’ என அழைக்கப்பட்டார்.

இதையும் படியுங்கள்:
‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ பாடலில் சௌகார் ஜானகி அணிந்திருந்த உடைக்குப் பின்னால் உள்ள கதை இது!
சௌகார் ஜானகி

அதனை தொடர்ந்து 1952-ம் ஆண்டு ‘வளையாபதி’ என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

பணம் படுத்தும் பாடு, புதிய பறவை, நீர்க்குமிழி, மகாகவி காளிதாஸ், எதிர் நீச்சல், இரு கோடுகள், உயர்ந்த மனிதன், தில்லு முல்லு, வெற்றிவிழா, ஹேராம் உள்ளிட்ட தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் இவர் நடித்த திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதோடு, இவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுக்கொடுத்தது.

சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன், கமல், ரஜினி, என்.டி. ராமராவ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கலைத்துறையில் சௌகார் ஜானகி பங்களிப்பை பாராட்டும் வகையில் இவருக்கு நந்தி விருதுகள், கலைமாமணி மற்றும் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவரது சகோதரியான கிருஷ்ண குமாரியும் புகழ்பெற்ற நடிகை ஆவார். நடிகை வைஷ்ணவி, சௌகார் ஜானகியின் உறவினர் ஆவார்.

logo
Kalki Online
kalkionline.com