மேக் இன் இந்தியா திட்டம் : இனி இந்தியாவிலேயே தயாராகிறது அதிநவீன ஹெலிகாப்டர்கள்..!

helicopter
helicoptersource:theguardian
Published on

இந்தியாவை சேர்ந்த அதானி டிஃபென்ஸ் & ஏரோஸ்பேஸ் மற்றும் இத்தாலியின் முன்னணி ஹெலிகாப்டர் நிறுவனமான லியோனார்டோ ஆகியன இணைந்து ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்தியாவின் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்தும் நோக்கில், இந்த நிறுவனங்கள் இந்தியாவில் ஹெலிகாப்டர்களை உற்பத்தியை தொடங்க உள்ளது.

இந்த கூட்டு முயற்சியானது இந்திய ஆயுதப்படைகளின் தேவைகளுக்காக , லியோனார்டோவின் அதி நவீன ரக ஹெலிகாப்டர்களான AW169M மற்றும் AW109 TrekkerM ஆகியவற்றை உற்பத்தி செய்யும். இது சம்பந்தமாக அதிகாரப்பூர்வமான ஒப்பந்தங்கள் முடிந்து இன்று தலைநகர் டெல்லியில் அறிவிப்பு வெளியானது.

​​இந்த புதிய கூட்டணி இந்தியாவில் ஒரு முழுமையான ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலை மற்றும் அதன் சேவைக்கான அமைப்புகளை உருவாக்கத்தை நோக்கமாக கொண்டுள்ளது. இந்தியாவின் புதிய கொள்கையான மேக் இன் இந்தியா திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ள இந்த ஒப்பந்தம், பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் இந்தியா மற்ற நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்றக்கூடும்.

இந்தியாவின் பாதுகாப்பிற்கு அதே கவனம் செலுத்தப்பட வேண்டிய சூழ்நிலையில் , ஆயுதப் படைகளின் அதிநவீன தேவைகளை பூர்த்தி செய்ய , தொழில்நுட்பம் வாய்ந்த AW169M மற்றும் AW109 TrekkerM ஆகிய ஹெலிகாப்டர்களை உள்நாட்டிலேயே உருவாக்க அதானி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இவை இந்தியாவில் உற்பத்தியை மேம்படுத்தி ராணுவத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் , ஹெலிகாப்டர் உற்பத்தியில் இந்தியாவின் தன்னிறைவை அதிகரிக்கும் வகையிலும், நோக்கமாகக் கொண்டு செயல்படும்.

இந்த கூட்டான்மை படிப்படியாக உள்நாட்டு மயமாக்கப்பட உள்ளது. ஹெலிகாப்டர் சேவைகளின் பராமரிப்பு , பழுது பார்ப்பு மற்றும் மறு சீரமைப்பு உள்ளிட்ட திறன்களை அடிப்படையாகக் கொண்டு விமானி பயிற்சி ஆகியவற்றையும் வழங்கும் என்று ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை மற்றும் பரப்பளவை ஒப்பிடுகையில், ஹெலிகாப்டர் செயல்பாடுகள் மிகவும் குறைவாக உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு நாட்டிற்கு சுமார் 100 ஹெலிகாப்டர்கள் ஒவ்வொரு வருடமும் தேவைப்படும்.

இது பற்றி அதானி டிபன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் ராஜ்வன்ஷி கூறுகையில், இந்தியாவின் எதிர்கால தேவைக்கு நவீன ஹெலிகாப்டர்கள் தேவை அதிக அளவில் உள்ளது. இதற்காக அடுத்த பத்து ஆண்டுகளில் இந்திய ராணுவத்திற்கு சுமார் 1,000-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் தேவைப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் ​அதானி டிஃபென்ஸ் & ஏரோஸ்பேஸ் இயக்குனர் ஜீத் அதானி, இந்த கூட்டணி வெறும் வியாபார நோக்கத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்ல. தேசத்தின் பாதுகாப்பு தேவைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு வலுவான அடித்தளம் அமைப்பதில் முக்கிய பங்காக இது இருக்கும் என்று கூறியுள்ளார். லியோனார்டோவின் நிர்வாக இயக்குனர் ஜியான் பியரோ கட்டிலோ, வேகமாக வளர்ந்து வரும் இந்திய சந்தைக்கு இது ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

அதானி நிறுவனம் தொடர்ச்சியாக விமானத் துறை சம்பந்தமாக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. ​கடந்த வாரம் தான் பிரேசிலின் எம்ப்ரேயர் நிறுவனத்துடன் விமான உற்பத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. தற்போது லியோனார்டோவுடன் இணைந்துள்ள அதானி நிறுவனத்தின் நடவடிக்கைகள் இந்திய விமான துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைக்கு நிகழ்ந்த ஒப்பந்த அறிவிப்புகள் வெளியானதில் இருந்து, சர்வதேச சந்தையில் லியோனார்டோ நிறுவனத்தின் பங்குகள் 2% வரை உயர்வு கண்டன.

இதையும் படியுங்கள்:
#BIG NEWS : வாட்ஸ்அப்-க்கு நீதிமன்றம் எச்சரிக்கை : பிரைவசியோட விளையாடாதீங்க... முடியலன்னா வெளிய போங்க..!
helicopter

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com