#BIG NEWS : இருசக்கர வாகனம் வாங்க ரூ.10,000 மானியம்,அரசு கேபிள் டிவி கட்டணம் 50 சதவீதமாக குறைப்பு உட்பட புது 10 வாக்குறுதிகளை அறிவித்தார் இபிஎஸ்..!

eps
EPSSource:Dinamani
Updated on

தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ், தான் அறிவித்த 297 வாக்குறுதிகளுடன் மேலும் 10 வாக்குறுதிகளை அவர் வெளியிட்டு உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கூடுதல் வாக்குறுதிகளின் விவரம் வருமாறு;

*பணிக்கு செல்லும் 10 லட்சம் இளைஞர்களுக்கு அம்மா இருசக்கர வாகனத்திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனம் வாங்க ரூ.10,000 மானியம் வழங்கப்படும்.

*பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, கண்காணிக்க 24/7 war room மாவட்ட தலைநகரங்களில் அமைக்கப்படும்.

*பனைத் தொழிலாளர்கள், பனைமரம் ஏறி தவறி விழுந்து உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

*அரசு கேபிள் டிவி கட்டணம் 50 சதவீதமாகக் குறைக்கப்படும்.

*மா விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, மாம்பழத்திற்கு ஆதார விலை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி ஆகிய பகுதிகளில் பாரம்பரிய முறைப்படி நடந்து வரும் அத்துக்கட்டு பண்டிகையை பாரம்பரிய முறையில் தொடர்ந்து நடத்துவதற்கு அரசாணை பிறப்பிக்கப்படும்.

* ட்டடத் தொழிலாளர்கள் பணி செய்யும்போது தவறி விழுந்து உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

*கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் முந்திரி உடைக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. அதிகளவிலான பெண்கள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சிறிய அளவிலான முந்திரி உடைக்கும் கை கருவி விலையில்லாமல் வழங்கப்படும்.

* மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்தவுடன் வேலை வாய்ப்பு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயார் ஆவதற்காக தாலுகா அளவில் சிறப்பு கவுன்சிலிங் அமைப்பு ஏற்படுத்தப்படும்.

* இளைஞர்கள், இளம் பெண்கள் சிறு, குறு தொழில்கள் தொடங்குவதற்கு விண்ணப்பித்தால் ஒற்றை சாளர முறையில் 30 நாட்களில் உரிமம் வழங்கப்படுவதுடன், அதற்காக வழங்கப்படும் மானியம் 25 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

இவ்வாறு இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ், தான் அறிவித்த 297 வாக்குறுதிகளுடன் மேலும் 10 வாக்குறுதிகளை அவர் வெளியிட்டு உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கூடுதல் வாக்குறுதிகளின் விவரம் வருமாறு;

*பணிக்கு செல்லும் 10 லட்சம் இளைஞர்களுக்கு அம்மா இருசக்கர வாகனத்திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனம் வாங்க ரூ.10,000 மானியம் வழங்கப்படும்.

*பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, கண்காணிக்க 24/7 war room மாவட்ட தலைநகரங்களில் அமைக்கப்படும்.

*பனைத் தொழிலாளர்கள், பனைமரம் ஏறி தவறி விழுந்து உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

*அரசு கேபிள் டிவி கட்டணம் 50 சதவீதமாகக் குறைக்கப்படும்.

*மா விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, மாம்பழத்திற்கு ஆதார விலை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி ஆகிய பகுதிகளில் பாரம்பரிய முறைப்படி நடந்து வரும் அத்துக்கட்டு பண்டிகையை பாரம்பரிய முறையில் தொடர்ந்து நடத்துவதற்கு அரசாணை பிறப்பிக்கப்படும்.

* ட்டடத் தொழிலாளர்கள் பணி செய்யும்போது தவறி விழுந்து உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

*கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் முந்திரி உடைக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. அதிகளவிலான பெண்கள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சிறிய அளவிலான முந்திரி உடைக்கும் கை கருவி விலையில்லாமல் வழங்கப்படும்.

* மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்தவுடன் வேலை வாய்ப்பு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயார் ஆவதற்காக தாலுகா அளவில் சிறப்பு கவுன்சிலிங் அமைப்பு ஏற்படுத்தப்படும்.

* இளைஞர்கள், இளம் பெண்கள் சிறு, குறு தொழில்கள் தொடங்குவதற்கு விண்ணப்பித்தால் ஒற்றை சாளர முறையில் 30 நாட்களில் உரிமம் வழங்கப்படுவதுடன், அதற்காக வழங்கப்படும் மானியம் 25 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

இவ்வாறு இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
"இந்தியா எதையும் மறக்காது"...பஹல்காம் தாக்குதலின் ஓராண்டு நினைவு தினத்திற்கு இந்தியா ராணுவத்தின் போஸ்ட்..!
eps

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com