அதிமுக - திமுக கூட்டணி வதந்திகளுக்கு பின்னால் இப்படியொரு அரசியல் சதியா? முன்னாள் அமைச்சர் அதிரடி.!

அதிமுக - திமுக கூட்டணி குறித்த வதந்திகள் ஏன் பரப்பப்படுகின்றன?
அதிமுக - திமுக கூட்டணி
ADMK - DMK
Updated on

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை தொகுதிகளை வென்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தற்போது ஆட்சி அமைத்துள்ளது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த திராவிட கட்சிகள் தோல்வியைத் தழுவிய நிலையில், திமுகவும் அதிமுகவும் கூட்டணி வைக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்தன.

விஜய் தலைமையிலான தவெக ஆட்சியைத் தடுக்கவே, திமுக - அதிமுக கூட்டணி வைக்கும் முடிவில் இருந்ததாக அமைச்சர் நிர்மல் குமார் சில தினங்களுக்கு முன்பு குற்றம் சாட்டினர். இவர் மட்டுமல்ல திமுக - அதிமுக கூட்டணி உருவாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிமுகவை சேர்ந்த சி.வி.சண்முகமும், திமுக கூட்டணி கட்சிகளும் தெரிவித்தன. ஆனால் திமுக மற்றும் அதிமுக தலைமை இந்த வதந்திகளை முற்றிலுமாக மறுத்தன.

இந்நிலையில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி என்பது வெறும் கட்டுக்கதை தான் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் 47 இடங்களை வென்ற அதிமுக, எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக நிர்வாகிகள், தொடர்ந்து அக்கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர். இதுவரை 6 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், 4 பேர் ஏற்கனவே தவெகவில் இணைந்து விட்டனர். மேலும் நாளை சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் தவெகவில் இணைய உள்ளனர்.

இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரான எம்.எஸ்.எம்.ஆனந்தன் இன்று அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து விலகிய எண்ணற்ற நிர்வாகிகள் தவெகவில் இணைவது, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து பலவீனமடைந்து வரும் அதிமுக, அடுத்து வரப்போகும் தேர்தல்களை எப்படி சந்திக்கப் போகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணியும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மேலும் சில நிர்வாகிகள் தவெகவில் இணைய இருப்பது உறுதி என்ற தகவல் மட்டும் தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் திமுக - அதிமுக கூட்டணி பேச்சுகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவில் இருந்து முன்னணி நிர்வாகிகளும், எம்எல்ஏக்களும் தொடர்ந்து வெளியேறி வருவது, திமுக - அதிமுக கூட்டணியை மேலும் உறுதி செய்யும் என்ற பேச்சுகள் வலம் வருகின்றன. ஆனால் இது வெறும் கட்டுக்கதை தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ADMK Ex-Minister
R.P.Udhayakumar
இதையும் படியுங்கள்:
ஆதார் பயனர்களுக்கு குட் நியூஸ்: இனி 6 மாதத்திற்கு கட்டணமே கிடையாது!
அதிமுக - திமுக கூட்டணி

இதுகுறித்து ஆர்.பி.உதயகுமார் மேலும் கூறுகையில், “எடப்பாடி பழனிசாமியை முதல்வராக மு.க.ஸ்டாலின் முயற்சி செய்தார் என்ற வதந்தி பரப்பப்படுகிறது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும், திமுக கூட்டணி கட்சிகளும் கற்பனைக் கதைகளை சொல்கிறார்கள்.

5 ஆண்டுகளில் 5 கட்சிகளுக்கு தாவிய தவெக அமைச்சர் நிர்மல் குமார், அதிமுகவை பற்றி பேசுகிறார். அவர்கள் தவெகவுக்கு செல்வதை நியாயப்படுத்த திட்டமிட்டு கட்டுக் கதை பரப்பப்படுகிறதோ என்ற சந்தேகம் எனக்கு எழுந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க மு.க.ஸ்டாலின் பேசியதை பக்கத்தில் இருந்து பார்த்தது போலவே பேசுகிறார்கள். இது வெறும் கட்டுக்கதை மட்டுமே” என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:
காலையிலேயே குட் நியூஸ்.. அதிரடியாக சரிந்தது தங்கம் விலை..!
அதிமுக - திமுக கூட்டணி
logo
Kalki Online
kalkionline.com