தமிழகத்தில் கோவையில் முதல்முறையாக ஒரு ரெஸ்டென்சியில் அஃப்கான் உணவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது கோவை உணவு பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு இடத்தில் இருந்துக்கொண்டு உலகம் முழுவதிலுமுள்ள உணவை ருசித்துப் பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் ஏராளம். ஒவ்வொரு நாட்டின் உணவை ருசிக்க அந்த நாடுகளுக்கு சென்று உணவருந்துவதற்குள், சாப்பிட வேண்டும் என்ற ஆசையே போய்விடும். இப்படி உள்ளூர் மக்களுக்கு வெளிநாடு அனுபவத்தைக் கொடுக்கும் விதமாகத்தான் கொரியன் உணவு, சிங்கப்பூர் உணவு, மலேசியா உணவு என பல நாடுகளின் உணவுகள் கொஞ்சம் கொஞ்சமாக இங்கு வந்தன.
ஆனால், அப்போதும் பல நாடுகளின் உணவுகள் இன்னும் தமிழகத்திற்கு வரவில்லை என்றே கூற வேண்டும்.
ஆனால், சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் எல்லா நாடுகளின் உணவுகளையும் பார்த்து ஆசைப்பட்டு விடுகிறார்கள். அப்படி உருவாகும் உணவுப் பிரியர்களுக்காகவே கோவை ரெஸிடென்ச் ஒன்றில் ஆஃப்கான் உணவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை அவிநாசி சாலையில் உள்ள “தி ரெசிடென்சி டவர்” நட்சத்திர விடுதியில் “ஆப்கான் கிரில் சிக்னேச்சர்” புதிய உணவு அறிமுகம் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நட்சத்திர விடுதியின் முதன்மை மேலாளர்கள் – உணவகத்தின் செஃப் மற்றும் உணவு தயாரிக்கும் செப் ஆகியோர் இணைந்து வெளிநாட்டினர்களுக்கு
புதுவகை உணவு வகைகளை அறிமுகம் செய்துள்ளனர்.
இது குறித்து ரெசிடென்சி ஓட்டல் ஏரியா டைரக்டர் ஆபரேஷன்ஸ் சார்லஸ் ஃபேபியன், நிர்வாக உதவி மேலாளர் சுஜித் குமார், தலைமை சமையல் கலைஞர் முகம்மது ஷமீம், ஆப்கன் கிரில் சமையல் கலை நிபுணர் அமித் கான் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.
"ஆஃப்கன் கிரில் உணவகத்தில் சாப்பிட வருபவர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் விதமாக ஸ்விம்மிங் பூல் அருகே நட்சத்திரங்களைப் பார்த்த வண்ணம் உணவருந்தும்படி அழகான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது." என்று பேசினர்.
மேலும் இங்குள்ள மசாலா வகைகள் டெல்லி மற்றும் லக்னோ ஆகிய பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார்கள்.
28 வகையான மூலப்பொருட்கள் சேர்த்து அதனை வாடிக்கையாளர்களுக்கு சுவையாக விநியோகம் செய்யப் போவதாகவும், குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வரும் வாடிக்கையாளர்கள் ரசிக்கும் வகையில் உணவு தயாரிக்கப்போவதாகவும் தெரிவித்தனர். மேலும் தமிழகத்தில் முதல் முறையாக ஆப்கான் கிரில் உணவகத்தை ரெசிடென்சி டவரில் அறிமுகம் செய்துள்ளதாக சமையல் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.