புயலை அடுத்து கியூபாவை உலுக்கிய நிலநடுக்கம்!

Cuba
Cuba
Published on

சூறாவளி மற்றும் மின்வெட்டு ஆகியவற்றால் தத்தளிக்கும் க்யூபாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.

கியூபாவில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த நாட்டில் பொருளாதார சரிவு போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த சில நாட்களாகவே அனைத்துப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. எரிபொருள், தண்ணீர் மற்றும் மருந்து பற்றாக்குறையால் கியூபா நாட்டு மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனைத்தொடர்ந்து மின்தடையும் ஏற்பட்டுள்ளது. இது அவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிக்கலாக்கியது. அந்த நாட்டின் மிகப்பெரிய மின் நிலையத்தில் பழுது ஏற்பட்டதால், நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டது.

அப்போது சில மக்களுக்கு விறகு அடுப்புகளால் சமைக்கும் நிலை வந்தது. சுமார் நான்கு நாட்கள் மின்சாரம் இல்லாததால் ரொட்டி போன்ற பொருட்களை வாங்க மக்கள் வரிசையில் நின்று வாங்கும் சூழல் ஏற்பட்டது. ஒருவழியாக சரி செய்தப் பின்னர் மீண்டும் 24 மணி நேரத்தில் பழுதாகியது. இதனால் நாட்டு மக்கள் இருளில் மூழ்கினர். இதன் காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். 

இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஃபேல் புயல் கியூபாவின் பல பகுதிகளை தாக்கி கடும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர். இதனால், மீண்டும் நாட்டின் பெரும்பகுதி மின்சாரம் இல்லாமல் தவித்தது.

இப்படியான சூழ்நிலையில் நேற்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. நிலநடுக்கத்தின் மையம் பார்டோலோம் மாசோவிற்கு (Bartolome Maso)தெற்கே சுமார் 25 மைல் (40 கிலோ மீட்டர்) தொலைவில் அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
பனிப் பிரதேசமாக மாறிய சவூதி! மக்கள் மகிழ்ச்சி! ஆனால்..!
Cuba

கியூபாவின் கிழக்குப் பகுதி முழுவதும் அதிர்வுகள் எதிரொலித்தன. சாண்டியாகோ டி கியூபா, நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான ஹோல்குயின் மற்றும் குவாண்டனாமோ உள்ளிட்ட முக்கிய மக்கள்தொகை கொண்ட பகுதிகளையும் நிலநடுக்கம் உலுக்கியது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடான ஜமைக்காவிலும் உணரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இயற்கையாலும், பொருளாதார ரீதியாகவும் கியூபா பெரும் நெருக்கடியை சந்தித்து வருவதால், அந்த நாட்டு மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com