பெங்களூருவைத் தொடர்ந்து மும்பையிலும் தண்ணீர் தட்டுப்பாடு… தவிக்கும் மக்கள்!

Mumbai Water Scarcity
Mumbai Water Scarcity

சில காலமாக பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் தவித்து வரும் நேரத்தில், தற்போது பெங்களூருவிலும் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் வறட்சி, கனமழை, வெள்ளம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எரிமலை வெடிப்பு, சுனாமி எச்சரிக்கை போன்றவற்றை உலக நாடுகள் எதிர்கொண்டு வருகின்றன. அந்தவகையில் பல நாட்களாகவே அதிக மக்கள்தொகை கொண்ட பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். உதாரணத்திற்கு, சமீபத்தில் காலரா நோயாளிகள் மருத்துவமனைகளில் அதிகம் அனுமதிக்கப்பட்டனர். இதற்கு காரணம் சுத்தமான குடிநீரை எடுத்துக்கொள்ளாததுதான் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவில் காலநிலை மாற்றத்தால், பெங்களூரு மட்டுமே தவித்து வந்தது. இதனையடுத்து தற்போது மும்பையிலும் இது ஆரம்பமாகியுள்ளது. மும்பையில் உள்ள கோராய் கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக தண்ணீரே வரவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதனால், அந்த கிராமத்தில் வசிக்கும் 5 ஆயிரம் குடும்பங்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். கோராய் கிராமத்தில் உள்ள மக்கள், தற்போது லாரிகள் மூலம் தண்ணீரை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.

சிலர் அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று கிணற்றில் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்துகின்றனர். அடிப்படை தேவைகளுக்கான தண்ணீர் கூட லாரிகளில் வாங்கி பயன்படுத்தக் கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதுவும், லாரிகளில் தண்ணீர் வாங்குவதால் ஒரு குடும்பம் 7000 ரூபாய் செலவழிக்க வேண்டியதாக உள்ளது என்று அந்த மக்கள் கூறுகின்றனர். அதேபோல் லாரிகளில் தண்ணீர் வாங்க முன்பதிவு செய்தாலும், உரிய நேரத்தில் வருவதில்லை. ஏனெனில், தற்போது தண்ணீருக்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளதாக அந்த கிராமத்து மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
ஓட்டுக்குப் பணம் கொடுத்ததை நிரூபித்தால், அரசியலை விட்டு விலகத் தயார்! – அண்ணாமலை
Mumbai Water Scarcity

கோராய் கிராமத்தை தவிர மும்பையின் நாசிக் பகுதியிலும் சில நாட்களாக தண்ணீர் பிரச்சனைத் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. அதுவும், நாசிக் பகுதியின்  அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு பெருமளவு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த மக்கள் குடிநீர்க் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். நாசிக் முனிசிபாலிட்டி, மக்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் வேறு இடங்களில் தண்ணீர் வாங்கி விநியோகம் செய்து வருகின்றது. இன்னும் சில நாட்கள் போனால், அதுவும் கிடைப்பது கஷ்டம் என்று அந்தப் பகுதி மக்கள் வேதனைத் தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com