ஓட்டுக்குப் பணம் கொடுத்ததை நிரூபித்தால், அரசியலை விட்டு விலகத் தயார்! – அண்ணாமலை

Annamalai
Annamalai
Published on

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அந்தவகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது வாக்கைப் பதிவு செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசினார்.

லோக்சபா தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் இன்றுத் தொடங்கியுள்ளது. அந்தவகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று காலை 7 மணி முதல் மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்கள். மக்களுடன் மக்களாக அரசியல் பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் வரிசையில் நின்று தங்கள் ஓட்டுகளைப் பதிவு செய்கின்றனர்.

அந்தவகையில், கோவை தொகுதி பாஜக வேட்பாளரும், தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை தனது சொந்த ஊரான கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி அரசுப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

வாக்களித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “நல்லவர்கள் ஆள வேண்டும். நல்ல ஆட்சித் தொடர அனைவரும் வாக்களிக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியைப் பார்த்த மக்கள், அடுத்த 5 ஆண்டுகளும் தொடர வேண்டும் என்றே விரும்புகிறார்கள்.”

மேலும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் பாஜக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக வெளியான குற்றச்சாட்டிற்கு பதில் அளித்தார், அண்ணாமலை. அதாவது, பாஜக ஓட்டுக்கு பணம் கொடுத்ததை நிரூபித்தால், அரசியலை விட்டு விலகத் தயார் என்று கூறினார். வேல்வியாகவும், தவமாகவும், வெளிப்படையாகவும் மக்களவைத் தேர்தலை எதிர்க்கொள்கின்றோம் என்று பேசினார்.

இதையும் படியுங்கள்:
மாலத்தீவு: முய்சுவின் அதிபர் பதவிக்கு வந்த புதிய சிக்கல்... பதவியில் நீடிப்பாரா?
Annamalai

“திமுக போன்ற கட்சிகள் மின்சாரத்தை துண்டித்துவிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்கின்றனர். திராவிட கட்சிகள் ரூ. 250, ரூ.500 என்று வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை நாடே பார்த்துக்கொண்டிருக்கிறது. மேலும், திராவிட கட்சிகள் பணம் கொடுத்து ஓட்டுகள் பெறுவதற்கு, இந்த மக்களவைத் தேர்தல் முடிவு கட்டும்.” என்று அண்ணாமலை பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com