இந்திய மாம்பழங்களுக்கு நேபாளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ரசாயன பூச்சிக்கொல்லிகள் இருப்பது கண்டறியப்பட்டதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் புகழ்பெற்ற மாம்பழங்களை அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் தற்போது பெரும் சிக்கல்களை சந்தித்து வருகிறது. ஏற்கனவே ஜப்பானிய அரசு இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய தடை விதித்தகருந்த நிலையில் தற்போது நேபாள அரசும் இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது.
20 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து பல்வேறு வகையான மாம்பழங்கள் ஜப்பானுக்கு ஏற்றுமதி ஆகி வந்த நிலையில் மாம்பழங்களில் தெளிக்கப்பட்டிருந்த அதிகப்படியான பூச்சிக்கொல்லி மருந்துகள் காரணமாக ஜப்பான் எடுத்த இந்த அதிரடி தடை ஏற்கனவே மாம்பழம் உற்பத்தியாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது நேபாளமும் இதே முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த தகவல்களில் நேபாள எல்லையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட சோதனைச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்திய மாம்பழங்களில் அனுமதிக்கப்பட்ட பாதுகாப்பான வரம்புகளை மீறி ரசாயன பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் எல்லைப் பகுதிகளில் மாம்பழங்களைச் சோதிக்கத் தேவையான பரிசோதனை மற்றும் பழங்களை பாதுகாக்க தனிமைப்படுத்தல் வசதிகள் இல்லாததும் ஒரு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது. குறிப்பாக நேபாளத்தில் இப்போது மாம்பழ அறுவடைக் காலம் என்பதால், அந்நாட்டு விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அவசியம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேபாள அரசின் இந்த திடீர் தடை உத்தரவால் நேபாள நாட்டில் உள்ள உள்ளூர் சந்தைகளில் மாம்பழங்களின் தட்டுப்பாடு ஏற்படும் என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தத் தடையால் நேபாளத்தில் திடீர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது மாம்பழம் பிரியர்களுக்கு வருத்தமளித்துள்ளது.
அதிக லாபம் மற்றும் துரிதமான விற்பனைக்காக பழங்கள் மேல் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் அளவு அதிகமாகும் போது இது போன்ற சிக்கல்கள் எழும் என்பது மாம்பழ ஏற்றுமதியாளர்கள் இனியாவது கவனத்தில் கொள்ள வேண்டும்.