அக்னி 5 சோதனை வெற்றி…வங்கக்கடலில் கப்பலிலிருந்து உளவுப் பார்த்த சீனா!

அக்னி - 5
அக்னி - 5

நேற்று இந்தியா, அக்னி 5 திவ்யாஸ்திரா சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இதனையடுத்து சோதனை நடத்திய இடத்தில் சீனாவின் போர்க்கப்பல் ஒன்று அந்த இடத்தின் அருகே சுற்றி வந்தது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா கடற்கரையில் ஏவுகணை ஒன்று சோதனை நடத்தப்படவுள்ளது என்று அறிவித்த சில நாட்களிலிருந்தே சீனாவின் போர்க்கப்பல் இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் காணப்பட்டுள்ளது. அந்தக் கப்பல் இப்போது இந்திய கடலோரப் பகுதியின் அருகே சர்வதேச கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

எம்ஐஆர்வி (Multiple independently targetable re-entry Vehicle) தொழில்நுட்பத்துடன் உருவான அக்னி 5 ஏவுகணைச் சோதனை நேற்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இதனை அதிகாரப்பூர்வமாக நரேந்திர மோதி தனது X தளத்தில் அறிவித்தார்.

இந்த எம்ஐஆர்வி தொழில்நுட்பம் மூலம், ஒரே நேரத்தில் பல வேகத்தில், பல திசைகளில் ஆயுதங்களைப் போட முடியும். இதுவரை இதனை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, லண்டன், ப்ரான்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே வைத்திருந்தன. இப்போது அந்த அதிநவீன ஏவுகணைச் சோதனை இந்தியாவிலும் வெற்றிபெற்றது. நேற்று சரியாக இந்தச் சோதனை நடத்தும்போது சீனாவின் கப்பல், சோதனை நடந்த இடத்தின் அருகேதான் இருந்தது.

நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் அணுசக்தி திறன்கொண்ட K-4 ஏவுகணையை இந்தியா ஏவ திட்டமிட்டது. இது 2 டன் எடையுள்ள ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்தச் சோதனையின் காரணமாக வங்காள விரிகுடா பகுதியில் மார்ச் 11 முதல் 16 வரை எந்த விமானமும் பறக்கக்கூடாது என்று இந்தியா எச்சரித்திருந்தது.

இதையும் படியுங்கள்:
சுருக்குப்பை செய்திகள்(11.03.2024) - மாலை
அக்னி - 5

சீனாவின் போர்க்கப்பலான சியான் யாங் ஹாங் 01 தற்போது விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 480 கிமீ தொலைவில் உள்ளது. அதே இடத்தில்தான் இந்தியாவின் அணுசக்தியால் இயங்கும் அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. சீனாவின் இந்தப் போர்க்கப்பல் கடந்த மார்ச் 6ம் தேதி மலாக்கா ஜலசந்தியில் நுழைந்தது. பின்னர் மார்ச் 8ம் தேதி நிக்கோபர் தீவுக்கும் இந்தியாவின் தீபக்கற்பத்தீவுக்கும் இடையில் காணப்பட்டது. அதன்பின்னர் 3 நாட்களுக்குப் பிறகு வங்காள விரிகுடா பகுதியில் சோதனைச் செய்யும் இடத்திற்கு வந்துள்ளது.

இந்தச் சீனக் கப்பல் 100 மீட்டர் நீளம் கொண்டது. இதனால் இந்தக் கப்பலால் ஒரே நேரத்தில் 15,000  கடல் மைல் தூரம் வரைச் செல்ல முடியும். அதேபோல் இது 10 ஆயிரம் ஆழம் வரை ஆய்வு செய்யக்கூடிய ரிமோர்ட் சென்சிங் கருவிகளைக் கொண்டுள்ளது. ஒலியைக் கண்டறியும் அதிநவீன சென்சர்களும் உள்ளன. நீர்மூழ்கி கப்பல் ஏற்படுத்தும் சிறு ஒலியைக் கூட இது  உணரும் மற்றும் நீருக்கடியில் ஏவுகணை லாஞ்ச் ஆகியவற்றையும் இது கண்டறிந்துவிடும். அகையால் இது உளவு கப்பல் என்பதில் சந்தேகமேயில்லை என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com