சுருக்குப்பை செய்திகள்(11.03.2024) - மாலை

news
news
  • உக்ரைன் போரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 20 Days in Mariupolக்கு சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கார் விருது. காட்ஜில்லா மைனஸ் 1 படத்திற்கு சிறந்த visual effectக்கான விருது.

  • தமிழ்நாட்டிற்கு மீண்டும் மார்ச் மாதம் மோடி வருகை தரவிருப்பதாக தகவல். மார்ச் 15ஆம் தேதி சேலத்தில் நடக்கும் பொது கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு, 16ஆம் தேதி கன்னியாகுமரியிலும், 18ஆம் தேதி கோவையிலும் பொது கூட்டங்களில் உரை, மார்ச் 22ஆம் தேதி தென்மாவட்டநகர் ஒன்றில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் வேட்பாளரை அறிமுகப்படுத்த வாய்ப்பு என்று அவரது பயண அட்டவணை வெளியீடு.

  • பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருவது சுற்றுப்பயணம் அல்ல வேற்று பயணம் என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம். புயல், மழையின் போது வராத பிரதமர் ஓட்டுக்காக ஓடோடி வருகிறார் என்று குற்றசாட்டு.

  • பெங்களூரில் கடும் தண்ணீர் கட்டுப்பாடு நிலவுவதால் தமிழ்நாட்டுக்கு காவேரியில் தண்ணீர் திறப்பதாக இல்லை என துணை முதலமமைச்சர் சிவகுமார் தெரிவித்தார். தலைநகருக்கு குடிநீர் வழங்கும் பதினாறாயிரம் ஆழ்துளை கிணறுகளே 7 ஆயிரம் கிணறு வற்றிவிட்டதாகவும் கூறினார்.

  • விலை உயர்ந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆன 450 அபெக்ஸ் விற்பனையை தொடங்கிய ஏதர் எனர்ஜி நிறுவனம் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் என அறிவித்துள்ளது.

  • பொன்முடி வழக்கில் சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு நிறுத்தி வைப்பு. தனி நீதிபதி வழங்கிய தண்டனை நிறுத்திவைக்க உச்ச நீதி மன்றம் அதிரடி உத்தரவு. பொன்முடி வழக்கில் உயர்நீதி மன்றம் சட்ட விதிகளை முறையாக பின்பற்றவில்லை என உச்ச நீதி மன்றம் கருத்து. குற்றவாளி என உயர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு நிறுத்திவைக்க பட்டதால் மீண்டும் எம்.எல்.ஏ ஆகிறார் பொன்முடி.

இதையும் படியுங்கள்:
சுருக்குப்பை செய்திகள்(11.03.2024)
news
  • இந்திய ஏவுகணை மற்றும் அணு ஆயுத திட்டங்களை உளவு பார்க்க சீனா கப்பல் முயற்சி. இந்திய கடற்படை 24மணி நேரமும் தீவிர கண்கண்காணிப்பு.

  • கோடை விடுமுறையை ஒட்டி உதிகையில் சிறப்பு மலை ரயில் சேவை அறிவுப்பு வரும் 29ஆம் தேதி முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை இந்த சிறப்பு ரயில் சேவை இயக்க நடவடிக்கை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com