குறைந்த வட்டியில் நகைக்கடன் வேண்டுமா.? இப்படி அப்ளை பண்ணுங்க..!

விவசாய நகைக்கடனின் முக்கியமான சிறப்பு என்னவென்றால், சாதாரண நகைக்கடனை விட வட்டி குறைவு, அத்துடன் கூடுதல் கடன் தொகையும் கிடைக்கும்.
gold loan
gold loan
Published on

2025-ம் ஆண்டில் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவு உயர்ந்து இருக்கிறது. சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரு லட்சம் ரூபாயை கடந்து வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. தங்கத்தின் விலை உயர உயர தங்கம் வாங்கும் போக்கு குறைந்திருக்கும் அதே வேளையில் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நகைக்கடன் என்றால், தங்க நகைகளை வங்கியில் அடமானம் வைத்து பணம் வாங்குவது என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த நகைக்கடனில் இரண்டு வகைகள் உள்ளது என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை. இதில் ஒன்று சாதாரண நகைக்கடன், மற்றொன்று விவசாய நகைக்கடன்(Agri Gold Loan). அந்த வகையில் விவசாய நகை கடனில் குறைந்த வட்டியில் அதிக தொகை கிடைக்கும்.

சமீபகாலமான தங்கத்தின் விலை ஏற்றத் இறக்கமாக இருப்பதால் வங்கிகள் நகைக்கடன் மதிப்பை குறைத்துள்ளன.

அதாவது ரிசர்வ் வங்கியின் அறிவுரையை தொடர்ந்து நகைக்கடன் மதிப்பை 60 முதல் 65 சதவீதமாக வங்கிகள் குறைத்து விட்டன.

அவசர தேவைக்காக, அதாவது, மருத்துவ செலவு, திருமணம், படிப்பு உள்ளிட்டவைக்கு தங்களிடம் உள்ள தங்க நகைகளை அடமானம் வைத்து நகைக்கடன் வாங்குவோம். இந்த கடனில் வட்டி சற்று அதிகமாக இருக்கும். மேலும் கடன் தொகைக்கும் ஒரு குறிப்பிட்ட வரம்பு இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ஹேப்பி நியூஸ்: கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் தங்க நகைக்கடன் தொகை அதிகரிப்பு..!
gold loan

ஆனால், விவசாயிகளுக்கு விவசாய நோக்கத்திற்காக வழங்கப்படும் தங்க நகைக்கடன் சற்று வேறுமாதிரியானது. அதாவது இந்த விவசாய நகைக்கடனின் சிறப்பு என்னவென்றால், சாதாரண நகைக்கடனை விட வட்டி மிகவும் குறைவு என்பதுடன் கூடுதல் கடன் தொகையும் பெறமுடியும். சாதாரண நகைக்கடனில் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை மட்டுமே கடன் கிடைக்கும் அதேவேளையில், விவசாய நகைக்கடனுக்கு ரூ.25 லட்சத்திற்கு அதிகமாகவும் கடன் கிடைப்பதுடன் விவசாய நகைக்கடனுக்கு சராசரியாக 7 சதவீதம் மட்டுமே வட்டி வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

விவசாய நிலத்திற்கான பட்டா உள்ளவர்கள் விவசாய நகைக்கடன் பெறமுடியும். இதில் அடகு வைக்கப்படும் தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கப்படுகிறது. கனரா வங்கி (90% LTV), பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி போன்றவை குறைந்த வட்டியில் விவசாய நகைக்கடன்களை வழங்குகின்றன. வட்டி விகிதம் 7 சதவீதம் வரையிலேயே இருப்பதால் இதிக தொகை வேவைப்படுபவர்களுக்கு இது பயனளிக்கும்.

தங்கக் கட்டிகள் மீது நகைக் கடன் வழங்கப்படாது என்பதை நினைவில் கொள்ளவும். ஆனால் அதே நேரத்தில் 50 கிராம் வரையில் தங்க நாணயங்கள் மீது வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.

யாருக்கு இந்த கடன் வழங்கப்படும்? விவசாய கடனை பெற தேவையான ஆவணங்கள்

* விண்ணப்பதாரரின் KYC ஆவணங்கள்:பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, பான் அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பயன்பாட்டு பில்கள் (தண்ணீர் மற்றும் மின்சாரம்)

* 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் கடன் பெறலாம்.

* விவசாயம் செய்பவர்கள்,சொந்த மற்றும் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள நிலத்தில் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள்

* விண்ணப்பதாரரின் பெயரில் விவசாய நிலத்தின் சான்று.

* நிலம் வைத்திருப்பதற்கான சான்றுகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதான சான்றுகளையும் வழங்க வேண்டும்.

* RBI/GoI/NABARD வழிகாட்டுதல்களின்படி விவசாயத்தின் கீழ் வகைப்படுத்த அனுமதிக்கப்படும் மற்ற அனைத்து விவசாய நடவடிக்கைகளும் இந்த கடன் வழங்கப்படுகிறது.

* இந்த ஆவணங்களை நகைக்கடன் பெறும் போது வங்கியில் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும்.இந்த நகைக்கடன் மூலம் விவசாயிகள் உடனடி பணத் தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடிகிறது.

இதையும் படியுங்கள்:
நகைக்கடன் வாங்கப் போறீங்களா? இந்த 3 விஷயத்தைத் தெரியாம போனா நஷ்டம் உங்களுக்குத்தான்!
gold loan

அதுமட்டுமின்றி விவசாயிகள் நகைக்கடன் பெற மக்கள் ஆர்வம் காட்டுவதற்கு முக்கிய காரணம் தேர்தல் சமயங்களில் இந்த விவசாயக்கடன்களும் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படலாம் என்பதால் தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com