

தமிழக அரசின் வேளாண்மைத் துறையிலிருந்து விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் சிறப்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயத்தை ஊக்குவிக்கவும், மகசூலை அதிகரிக்கவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.. இதன் தொடர்ச்சியாக தமிழக அரசு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.
தமிழக கிராமங்களில் தற்போது விவசாய வேலைகளுக்கு கூலி ஆட்கள் கிடைப்பதில் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் , விவசாயப் பணிகள் சரியான நேரத்தில் பயிரிடவும், அறுவடை செய்யமுடியாமலும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப விவசாயத் துறையில் நவீன மாற்றங்களை ஏற்றுக் கொண்டு , புதிய தொழில்நுட்பங்களை விவசாயத்தில் பயன்படுத்தப்பட வேண்டும். இதற்காக தமிழக அரசு வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் அதிரடி மானியங்களை அறிவித்துள்ளது.
விவசாயத்தில் ஆள் பற்றாக்குறைகளை சரி செய்ய எந்திரங்களை புகுத்தி , விவசாய வழிமுறைகளை எளிமையாகவும், விளைச்சலைப் பெருக்கி அதிக வருமானம் பெறவும் வழிவகுக்கும், தமிழக அரசின் இந்த வழிமுறை பெரிதும் உதவிகரமாக இருக்கும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், விவசாயிகளின் பெரும் சுமையைக் குறைக்கும். இந்த திட்டத்தின் கீழ் விவசாய கருவிகளை வாங்க 50% வரை மானியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் மானியம் யாருக்கு கிடைக்கும்?
அரசாங்கத்தின் இந்த திட்டத்தின் கீழ் அனைத்து வகையான விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2.5 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை விவசாய நிலம் வைத்துள்ள சிறு குறு விவசாயிகளுக்கு இந்த மானியம் கிடைக்கும். மேலும் சொந்த நிலத்தில் விவசாயம் செய்யும் பெண்கள் ,
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கும் இந்த மானியம் கிடைக்கும். இவர்கள் அனைவருக்கும் விவசாய எந்திரங்கள் வாங்க 50% மானியம் கிடைக்கும். உதாரணமாக ஒரு விவசாய எந்திரத்தின் விலை ₹1 லட்சம் என்றால் அரசாங்கம் ₹50 ஆயிரம் மானியமாக, நேரடியாக செலுத்தி விடுகிறது. மீதமுள்ள தொகையை மட்டும் விவசாயிகள் செலுத்தினால் போதும்.
இது தவிர மேலே குறிப்பிடாத விவசாயிகளுக்கும் , விவசாய எந்திரங்கள் வாங்க அரசாங்கம் தனியாக மானியங்களை வழங்குகிறது. இவர்களுக்கு 40% வரை மானியங்களை வழங்குகிறது. மேலும் கிராமங்களின் விவசாய இயந்திரங்களை வாடகைக்கு விடும் கடை அமைக்க 80% வரை மானியம் வழங்கப்படுகின்றன.
மானியம் எந்தெந்த எந்திரங்களுக்கு கிடைக்கும்?
டிராக்டர்கள், பவர் டில்லர்கள் , நெல் நடவு இயந்திரங்கள், களையெடுக்கும் கருவிகள் , அறுவடை இயந்திரங்கள் ,
கரும்பு சோகை அரைக்கும் கருவிகள் , தேங்காய் மட்டை உரிக்கும் கருவிகள் , இதர மதிப்புக்கூட்டும் சிறு இயந்திரங்கள். போன்ற விவசாயக் கருவிகளை இந்த திட்டத்தின் மூலம் மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பிப்பது எவ்வாறு?
தகுதியுள்ள விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், நிலத்தின் சிட்டா மற்றும் பட்டா ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். உங்கள் மொபைலில் இருந்து 'உழவன்' (Uzhavan App) செயலியைப் பதிவிறக்கம் செய்து நேரடியாக விண்ணப்பிக்கலாம்
அல்லது உங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம்.