தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் : விவசாயத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று தாக்கல் !

தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் : விவசாயத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று  தாக்கல் !
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தமிழ்நாடு அரசின் இந்த நிதி ஆண்டின் 2023-24 வேளாண் பட்ஜெட் விவசாயத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார். அதன்படி இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இதற்காக ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேளாண் பட்ஜெட் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் முதல் முறையாக வேளாண் பட்ஜெட் அறிவிக்கப்பட்டு மூன்றாவது முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

2023-24ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தயாரிப்பதற்கு முன்னர் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் விஞ்ஞானிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் வேளாண் விளைபொருள் ஏற்றுமதியாளர்கள் போன்ற பல்வேறு பிரிவுகளை சார்ந்த மக்களின் கருத்துக்களை கேட்டு அதற்கேற்ப வேளாண் நிதிநிலை அறிக்கையை தயாரிக்கப்பட்டுள்ளது.

இம்முறையில் வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்களால் தாக்கல் செய்யப்பட உள்ளது. பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் மார்ச் 23 முதல் 27 வரை நடைபெறும். மார்ச் 28 முதல் பல்வேறு துறை ரீதியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசின் 2023-24 -ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார்.மார்ச் 29 ஆம் தேதி முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும். பல்வேறு துறை சார்ந்த மானிய கோரிக்கை மீதான விவாதம் 23, 24, 27, 28-ம் தேதிகளில் நடைபெறும். காலை, மாலை என இரு வேளைகளிலும் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும். காலை 10 – 2 மணி வரை, மாலை 4 – 8 மணி வரை என இரு நேரங்களில் அவை நடைபெறும். காலை நேரத்தில் கேள்வி நேரம் நடைபெறும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com