260 பேரை பலிகொண்ட அகமதாபாத் விமான விபத்திற்கு காரணம் விமானியா? வெளியான அதிர்ச்சி தகவல்!

Ahmedabad Plane Crash
Ahmedabad Plane Crashimg credit - news18.com
Published on

​கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி, மதியம் 1.39 மணிக்கு அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம், பயணத்தை தொடங்கிய 39 ஆவது வினாடியிலேயே, கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மருத்துவ மாணவர் விடுதி ஒன்றின் மீது விழுந்து நொறுங்கியது. இந்த கோரமான விமான விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஒருவரை தவிர, விமானிகள் , பணியாளர்கள் , கட்டிடங்களில் இருந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்பட 260 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்து பற்றி தொடர்ச்சியாக விசாரனை நடந்து வந்தது.

அகமதாபாத் விமான விபத்து பற்றி இத்தாலியை சேர்ந்த நாளிதழான 'கோரியர் டெல்லா செரா' ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி இந்தியா மற்றும் சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து துறையில் பெரிய அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியில் " விமானி விமான எஞ்சினுக்கு செல்லும் எரிபொருள் பட்டனை வேண்டுமென்றே அணைத்ததால் தான் , விமானம் விபத்துக்குள்ளாகியது " என்று கூறியுள்ளது.

இத்தாலிய ஊடக செய்தியின் படி , விமான விபத்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அல்லது வெளிப்புற சதியின் காரணமாக ஏற்படவில்லை என்று தெரிகிறது. காக்பிட்டில் இருந்த ஒரு விமானியின் வேண்டுமென்றே செய்யப்பட்ட செயலால் (Deliberate Act) நிகழ்ந்தது , என்றும் அந்த செய்தி கூறுகிறது. இத்தாலிய செய்தித்தாளின் அறிக்கையை பற்றி இந்திய விமானத்துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகம் எந்தவொரு கருத்தும் கூறவில்லை.

விமான விபத்து குறித்து இந்திய விமான விபத்து புலனாய்வுப் பணியக(AAIB) அதிகாரிகள் வாஷிங்டன் சென்று , விமானத்தின் கருப்பு பெட்டியை ஆராய்ந்து அமெரிக்க நிபுணர்கள் குழுவுடன் இணைந்து சில உண்மைகளை கண்டறிந்தனர். அவை

1. விமானத்தின் எரிபொருள் இன்ஜின்களுக்கு செல்லும் எரிபொருளை கட்டுப்படுத்தும் பட்டன்கள் அணைக்கப்பட்டது தான் விபத்துக்கு முழு காரணம்.

2. கருப்பு பெட்டியில் இருந்து எடுக்கப்பட்ட குரல் பதிவில் ஒரு விமானி" நீங்கள் என் எரிபொருளை துண்டித்தீர்கள் ? என்று கேட்க இன்னொரு விமானி " நான் அதை செய்யவில்லை" என்று பதிலளிக்கும் உரையாடல் பதிவாகியுள்ளது.

​3. நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி ஏர் இந்திய விமானத்தில் எந்த ஒரு தொழில்நுட்ப கோளாறுகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு இன்ஜின்களும் ஒரே நேரத்தில் அணைக்கப்பட்டது விமானிகளால் மட்டுமே சாத்தியம் என்று விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

4. இது குறித்து விசாரிக்கையில், விமானி சுமித் சபர்வால் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவருடைய தனிப்பட்ட குடும்ப பிரச்சினைகளின் காரணமாக மிகக் கடுமையான மன உளைச்சலுக்கு அவர் ஆளாகியுள்ளார், என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் அவரது தந்தை இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

விபத்தின் பாடங்கள்:

இந்த விபத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை வைத்து , எதிர்கால பாதுகாப்பான விமான பயணங்களுக்கு தேவையான, புதிய பாதுகாப்பு அம்சங்களை விமானத்தில் நிறுவ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காக்பீட்டில் உள்ள முக்கிய சுவிட்சுகளை தெரிந்தோ, தெரியாமலோ அணைப்பதை தவிர்க்க, கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை கட்டாயம் சேர்க்கப்பட வேண்டியது அவசியம்.

விமானிகளை மனநிலையை ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் கண்காணிக்காமல் அவ்வப்போது தொடர்ச்சியாக கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும் , என்று இறுதி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட உள்ளது. விரைவில் இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ,விமான விபத்து குறித்து முழுமையாக தனது இறுதி அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: ஒரு தொகுதிக்கு 10 பேர் கொண்ட 6 குழு! பக்காவா பிளான் போடும் தவெக.!
Ahmedabad Plane Crash

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com