AI பெண் பாடகி… ஆடிப் பாடி அசத்தும் அற்புதம்!

AI Model K-Pop singer
AI Model K-Pop singer
Published on

தென்கொரியா நிறுவனம் ஒன்று AI தொழில்நுட்பம் பயன்படுத்தி K-Pop பெண் பாடகியையே உருவாக்கியுள்ளது ரசிகர்களை பேரதிர்ச்சியாக்கியுள்ளது.

இன்று செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் அத்தியாவசிய ஒன்றாக மாறிவருகிறது. சாதாரண மக்கள் வரை தனது போனில் எளிதாக AI பயன்படுத்துகிறார்கள். தங்களது சந்தேகங்களையும், தங்களது கற்பனைகளையும் AI யிடமே பகிர்ந்துக்கொள்கிறார்கள். அதேபோல் இப்போது உள்ள குழந்தைகளுக்கு சிறந்த கேம் பார்ட்னர் AI. இவையனைத்தையுவிட AI மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்களே நல்ல வரவேற்பை பெறுகின்றன. இந்த படங்களையே பலரும் பயன்படுத்துகின்றனர்.

இப்படி AI ஒருபக்கம் மனிதர்களுக்கு மிகவும் உதவியாக இருக்க, மறுபுறம் பலருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று கே-பாப் பாடல்கள். இந்தப் பாடல்கள் உலக முழுவதும் பல கோடி ரசிகர்களைப் பெற்றுள்ளது.

இதனையடுத்து AI மற்றும் கே- பாப் இரண்டும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? ஆம்! தென்கொரியாவைச் சேர்ந்த SM Entertainment என்ற நிறுவனம் முதல் முறையாக ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நேவிஸ் (Naevis) என்ற கே-பாப் பெண் பாடகியை உருவாக்கியுள்ளது. இந்த நேவிஸ் தற்போது “Done” என்ற ஆல்பம் பாடலில் பாடி, டான்ஸ் ஆடி உள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அதைத்தொடர்ந்து நேவிஸ் படங்கள், கேம்களிலும் இடம்பெற உள்ளதாகவும், நேவிஸ் பெயரில் பல பொருட்களும் தயாரித்து விற்கப்பட உள்ளதாகவும் அதை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
ஏலியன்கள் இருக்கிறதா? இல்லையா? என்பதை ஆதாரத்துடன் கண்டுபிடிக்க தயாராகும் நாசா!
AI Model K-Pop singer

AI மூலம் உருவாக்கப்பட்ட இந்த  நேவிஸின் நடனமும் பாடலும் அனைவருக்கும் பிடித்துப்போய்விட்டதால், இந்த பெண்ணுக்கென்ற தனி ரசிகர்கள் கூட்டம் வந்துவிட்டது. உலகம் முழுவதும் இந்த AI பெண் பிரபலமாகிவிட்டார். இதனையடுத்து சமூக வலைதளங்களில், அந்த வீடியோக்கள் மற்றும் நேவிஸ் போட்டோஸ் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

நேவிஸ் என்று கூகிலிடம் போட்டால் கூட, Musical artist என்றுதான் அறிமுகப்படுத்துகிறது. மேலோட்டமாக பார்ப்பவர்கள் AI என்று கணிக்கக்கூட முடியாது என்பதால், மனிதர்களோடு மனிதராய் ஒரு AI என்ற நிலை வந்துவிட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com