AI செய்தி அறிவிப்பாளர்கள்… அறிமுகப்படுத்தி சாதித்த டிடி கிசான்..!

DD Kisan AI news anchor
DD Kisan AI news anchor
Published on

சமீப காலமாக AI எனப்படும் 'செயற்கை நுண்ணறிவு' பல துறைகளில் பயன்படுத்தும் ஆயத்தங்கள் நடைபெற்று வருகின்றன. தூர்தர்ஷன் கிசானும் இரு AI செய்தி அறிவிப்பாளர்களை அறிமுகப்படுத்தி செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தும் நாட்டின் முதல் அரசு தொலைக்காட்சி சேனல் எனும் பெருமையைப் பெறுகிறது.

இந்தியாவின் உயிர் நாடி விவசாயம். விவசாயம் குறித்த தகவல்களை வெளிப்படுத்தி வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கான முழு அளவிலான தொலைக்காட்சி சேனல் (டிடி கிசான் சேனல்) 26 மே 2015 அன்று பிரதமரால் தொடங்கப்பட்டது. இந்த சேனலின் பிரதான நோக்கம் இந்தியாவில் உள்ள விவசாயம் மற்றும் கிராமப்புறச் சமூகத்திற்கு சேவை செய்வதும்,

விவசாயம் சார்ந்த அனைத்து செய்திகளும் நாட்டின் தொலைதூர பகுதிகளில் உள்ள கிராமப்புற மக்களுக்குத் தெரிவிக்கவும், அவர்கள் கல்வியறிவு பெறவும் மற்றும் நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான முழுமையான சூழலை உருவாக்குவதும் ஆகும்.

மேலும், வானிலை, உலகளாவிய மற்றும் உள்ளூர் சந்தைகள் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விவசாயிகளுக்கு உடனுக்குடன் தெரிவிப்பதும் இதனால் விவசாயிகள் முன்கூட்டியே தகுந்த திட்டங்களை உருவாக்கி சரியான முடிவுகளை எடுக்க உதவுவதுமே இதன் நோக்கம்.சேனலில் கிராமப்புற மற்றும் விவசாய சமூகத்திற்கான புனைகதை மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் போன்ற பல்வேறு சுவாரஸ்ய நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

9 வருட சிறப்பான வெற்றிக்குப் பிறகு மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது தூர்தர்ஷன் டிடி கிசான். புதிய தோற்றத்துடனும் புதிய ஸ்டைலுடனும் கடந்த 2024 மே 26 அன்று இந்திய விவசாயிகள் மத்தியில் AI கிரிஷ், AI பூமி எனும் பெயர்களுடன் இரண்டு செயற்கை நுண்ணறிவு தொகுப்பாளர்களை அறிமுகப்படுத்தியது.

இதையும் படியுங்கள்:
பிரதமர் மோடி தெய்வ மகன் கிடையாது: அரசியல் பேசுவதற்கு இதுதான் காரணம்... பிரகாஷ் ராஜ் கொடுத்த விளக்கம்!
DD Kisan AI news anchor

இந்தச் செய்தி அறிவிப்பாளர்கள் மனித வடிவில் உள்ள கணினி வடிவமைப்பு என்றாலும் இவை ஒரு மனிதனைப் போலவே செயல்படும். இந்த செயற்கை செய்தி அறிவிப்பாளர்களால் ஒரு நாளின் 24 மணி நேரமும் 365 நாட்களும் செய்திகளை இடைவிடாமல் படிக்க முடியும்.

காஷ்மீர் முதல் தமிழகம் மற்றும் குஜராத் முதல் அருணாச்சலம் வரை நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள இவர்கள் தரும் செய்திகளை விவசாயப் பார்வையாளர்கள் பார்க்க முடியும். இந்த AI அறிவிப்பாளர்கள் நாடு மற்றும் உலக அளவில் நடக்கும் விவசாய ஆராய்ச்சிகள், விவசாயத்தின் போக்குகள் குறித்து விவசாயத்திற்குத் தேவையான அனைத்து தகவல்களையும் வழங்குவார்கள். இந்த AI அறிவிப்பாளர்கள் நம் நாட்டின் மொழிகள் உள்பட வெளிநாடுகளில் உள்ள ஐம்பது மொழிகளில் பேச முடியும் என்பது தனிச்சிறப்பு.

நாட்டின் பல பகுதிகளில் உள்ள தனியார் சேனல்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தினாலும் அரசு சேனலில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com