
ரிலையன்ஸ் மற்றும் மெட்டா நிறுவனங்கள் கைகோர்த்து, லாமா AI என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்திய நிறுவனங்களுக்காகப் புதுப்புது AI கருவிகளை உருவாக்கப் போறாங்க.
இந்தக் கருவிகள், அந்தந்தத் துறைக்குத் தேவையான வேலைகளைத் தானாகவே புரிந்துகொண்டு, செய்து முடிக்கும். இதனால், இந்திய நிறுவனங்கள் தங்கள் வேலைகளை இன்னும் சுலபமாகவும், வேகமாகவும் செய்ய முடியும்.
ரிலையன்ஸ்-மெட்டா கூட்டு முயற்சிக்கு ₹855 கோடி (சுமார் $100 மில்லியன்) ஆரம்ப முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் 70% முதலீடு செய்கிறது, மீதமுள்ள 30% மெட்டா நிறுவனம் முதலீடு செய்கிறது.
ரிலையன்ஸ்-மெட்டா கூட்டணி, லாமா AI-ஐ பயன்படுத்தி, இந்திய நிறுவனங்களின் வேலைகளுக்கு ஏற்ற, தானாகவே இயங்கும் AI கருவிகளை உருவாக்கப் போகிறது. இந்தக் கருவிகளை நிறுவனங்கள் எந்த மாற்றமும் இல்லாமல் உடனே பயன்படுத்தலாம்.
இந்தக் கூட்டணி, இந்திய நிறுவனங்களுக்கு ஒரு முழுமையான AI சேவையை வழங்கும். இதன் மூலம், ஒவ்வொரு நிறுவனமும் தனக்குத் தேவையான AI-ஐ உருவாக்கிக்கொள்ளலாம்.
விற்பனை, மார்கெட்டிங், வாடிக்கையாளர் சேவை போன்ற வேலைகளுக்காக... நிதி சார்ந்த மற்றும் பல அலுவலக வேலைகளையும்... எளிதாகச் செயல்படுத்தவும், கண்காணிக்கவும் முடியும்.
சுருக்கமாக சொல்வதென்றால், அன்றாட வேலைகளை இந்த AI தானாகவே கவனித்துக்கொள்ளும்.
முகேஷ் அம்பானியின் நோக்கம்: AI இனி அனைவருக்கும்...! முகேஷ் அம்பானி, "மெட்டா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்திருப்பது, ஒவ்வொரு இந்தியருக்கும், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் AI-ஐ கொண்டு செல்ல வேண்டும் என்ற நமது கனவுக்கு உயிரூட்டுகிறது" என்று கூறினார்.
முகேஷ் அம்பானியின் நோக்கம்: AI இனி அனைவருக்கும்
முகேஷ் அம்பானி, "மெட்டா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்திருப்பது, ஒவ்வொரு இந்தியருக்கும், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் AI-ஐ கொண்டு செல்ல வேண்டும் என்ற நமது கனவுக்கு உயிரூட்டுகிறது" என்று கூறினார்.
முக்கிய விஷயம்: மெட்டாவின் பிரபல AI தொழில்நுட்பமான 'லாமா'வை, ரிலையன்ஸின் பல்வேறு துறைகளில் உள்ள ஆழ்ந்த அறிவுடன் இணைப்பதன் மூலம், இந்த இலக்கை அடைய முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
பெரிய நோக்கம்: சிறிய கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைவருக்கும் AI தொழில்நுட்பம் கிடைக்கும். இதனால் அவர்கள் இன்னும் வேகமாகச் செயல்படலாம், சிறப்பாகப் போட்டியிடலாம்.
ரிலையன்ஸ் நிறுவனமே சோதனைக்களம்
சோதனை முயற்சி: இந்த கூட்டு முயற்சியில் உருவாகும் AI கருவிகளை முதலில் ரிலையன்ஸ் நிறுவனமே பயன்படுத்தும்.
முக்கியக் காரணம்: இதன் மூலம், இந்தத் தொழில்நுட்பம் நிஜ உலகில் எப்படிச் செயல்படுகிறது என்பதை அவர்கள் சோதித்துப் பார்ப்பார்கள். ஏதாவது குறைபாடுகள் இருந்தால், அதை உடனடியாகச் சரிசெய்து, மேலும் மேம்படுத்துவார்கள்.
குறைந்த செலவில் AI அனைவருக்கும்
இந்தக் கூட்டணியின் முக்கியமான நோக்கம், மிகவும் சக்திவாய்ந்த AI மாடல்களை மிகக் குறைந்த செலவில் கொண்டு வருவதுதான். காரணம், மெட்டாவின் லாமா தொழில்நுட்பம், மற்ற ஏஐ மாடல்களை விடப் பயன்படுத்த மிகவும் குறைவான செலவே ஆகும்.
இதன் மூலம், நிறுவனங்கள் தங்கள் கம்ப்யூட்டர்களில், கிளவுட் சேவையில் அல்லது சொந்த சர்வர்களில் இந்த AI-ஐப் பயன்படுத்த முடியும். இது செலவுகளைக் கட்டுக்குள் வைக்க அவர்களுக்கு உதவும்.
மார்க் சக்கர்பெர்க் என்ன சொன்னார்?
மெட்டாவின் இணை நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், வீடியோ செய்தி மூலம் இதை உறுதிப்படுத்தினார்.
"லாமா AI-ஐப் பயன்படுத்தி, மனிதர்களின் திறனை மேம்படுத்தி, வேலைத்திறனை அதிகரிக்கவும், புதிய சிந்தனைகளைத் தூண்டவும், புதிய கண்டுபிடிப்புகளை வேகப்படுத்தவும் முடியும் என்பதை நாங்கள் பார்த்தோம்."
"இப்போது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் பரந்து விரிந்த பிசினஸ் நெட்வொர்க் மூலம், இந்தத் தொழில்நுட்பத்தை இந்தியாவின் மூலைமுடுக்குகளுக்கும் கொண்டு செல்ல முடியும்."
சக்கர்பெர்க் மேலும், "இந்தக் கூட்டணி மூலம், ஒவ்வொரு தொழில்முனைவோரும், படைப்பாளிக்கும், நிறுவனத்திற்கும் தேவையான கருவிகளை வழங்குவோம். இந்த முயற்சி, AI தொழில்நுட்பத்தையும், ஒரு நாள் 'சூப்பர் இன்டெலிஜென்ஸ்' எனப்படும் மிகவும் சக்திவாய்ந்த AI-ஐயும் அனைவருக்கும் கொண்டு செல்லும் ஒரு முன்மாதிரியாக அமையும் என்று நான் நம்புகிறேன்" என்று கூறினார்.
கூகுளுடனும் ஒரு பெரிய கூட்டணி
அதே கூட்டத்தில், ரிலையன்ஸ் நிறுவனம் கூகுள் நிறுவனத்துடனும் ஒரு பெரிய கூட்டணியை அறிவித்தது. இதன் மூலம், எரிசக்தி, சில்லறை வர்த்தகம், தொலைத்தொடர்பு மற்றும் நிதி சேவைகள் போன்ற ரிலையன்ஸ் குழுமத்தின் அனைத்துத் தொழில்களிலும் AI தொழில்நுட்பத்தைப் புகுத்தப் போகிறார்கள்.
இதுமட்டுமல்லாமல், இந்தியாவில் AI தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, ரிலையன்ஸ் நிறுவனம் 'ரிலையன்ஸ் இன்டெலிஜென்ஸ்' என்ற புதிய நிறுவனத்தையும் தொடங்கியுள்ளது. இதன்மூலம், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸை ஒரு 'ஆழமான தொழில்நுட்ப நிறுவனமாக' மாற்றும் கனவு நனவாகும் என்று கூறப்படுகிறது.