நம் வாழ்நாளின் இறுதி நாளை சொல்லும் ஏஐ!

Death clock
Death clock
Published on

ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு செயலியில் இனி நமது கடைசி நாளை தெரிந்துக்கொள்ளலாம். வாருங்கள் அது என்ன செயலி என்று பார்ப்போம்.

சமீபக்காலமாக ஏஐயின் வளர்ச்சி உச்சத்தை அடைந்திருக்கிறது. இன்று செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அத்தியாவசிய ஒன்றாக மாறிவருகிறது. சாதாரண மக்கள் வரை தனது போனில் AI பயன்படுத்துகிறார்கள். தங்களது சந்தேகங்களையும், தங்களது கற்பனைகளையும் AI யிடமே பகிர்ந்துக்கொள்கிறார்கள். அதேபோல் இப்போது உள்ள குழந்தைகளுக்கு சிறந்த கேம் பார்ட்னர் AI.

இவையனைத்தையும்விட AI மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்களே நல்ல வரவேற்பை பெறுகின்றன. இந்த படங்களையே பலரும் பயன்படுத்துகின்றனர்.

ஏஐயின் வளர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கம் இந்த வளர்ச்சி மனித இனத்திற்கு பெரும் சவாலாக ஒன்றாக மாறிவிடுமோ என்று அஞ்சப்படுகிறது.

ஏஐ உலகமாக மாறி வரும் இந்த உலகத்தில் ஜாதக்காரர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் வந்துவிடும்போல். ஆம்! இப்போது ஏஐ நமது வாழ்க்கை மற்றும் மரணம் பற்றியெல்லாம் கணிக்கப்போகிறதாம்.

அந்தவகையில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு ஆப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் Death clock. இந்த செயலி பயன்படுத்தி நம்முடைய கடைசி நாள் குறித்துத் தெரிந்துக்கொள்ளலாம். ஆம்! மரண நாளை காண்பிக்கும் ஒரு செயலிதான் இந்த செயலி. இந்த ஆப்பை ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இது ஒரு மாபெரும் வெற்றியாக கருதப்படுகிறது.

இந்த ஆப் சுமார் 5.3 கோடி பேரின் உதவியுடன் 1,200க்கும் மேற்பட்ட ஆயுட்கால ஆய்வு தரவுகளின்படி கட்டமைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
சீனாவுக்கு அடித்த சரியான ஜாக்பாட்! செம தூள்!
Death clock

இது ஜாதகாரர்களைவிட சற்று வித்தியாசமானதுதான். ஏனெனில், நட்சத்திரங்கள், பிறப்பு தேதி போன்றவற்றை பயன்படுத்தி சொல்லாமல், உணவு, உடற்பயிற்சி, மன அழுத்த நிலைகள் மற்றும் தூக்கம் ஆகியவற்றைப் பயன்படுத்தி செய்திகளை சொல்லும்.

சமீபத்தில் அமெரிக்காவில் வாழும் ஒரு 86 வயது முதியவர் அடுத்த ஒரு வருடத்திற்குள் இறப்பதற்கான சாத்தியம் 10 சதவிகிதம் இருப்பதாகவும். ஆனால் சராசரியாக 5 முதல் 6 வருடங்கள் வரை வாழ்வார் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com