நர்ஸ் வேலையை இனி ஏஐயே செய்துவிடும் என்றும், ஆகையால் நர்ஸ் பணிக்கு வரும்காலத்தில் சிக்கல் ஏற்படும் என்றும் செய்திகள் வந்துள்ளன.
இன்று செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் அத்தியாவசிய ஒன்றாக மாறிவருகிறது. சாதாரண மக்கள் வரை தனது போனில் எளிதாக AI பயன்படுத்துகிறார்கள்.
தங்களது சந்தேகங்களையும், தங்களது கற்பனைகளையும் AI யிடமே பகிர்ந்துக்கொள்கிறார்கள். அதேபோல் இப்போது உள்ள குழந்தைகளுக்கு சிறந்த கேம் பார்ட்னர் AI. இவையனைத்தையுவிட AI மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்களே நல்ல வரவேற்பை பெறுகின்றன. இந்த படங்களையே பலரும் பயன்படுத்துகின்றனர்.
ஏஐ மூலம் இறந்தவர்களின் குரலை மீண்டும் கொண்டு வந்து பாடல்களில் பயன்படுத்துகிறார்கள். இன்னும் சில காலங்களில் ஏஐ அனைத்து துறைகளையும் ஆளும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துவிடும். AI பல துறைகளில் பல வழிகளில் உதவியாக உள்ளது. நமது பல வேலைகளை ஏஐ சுலபமாக்குகிறது.
மறுபக்கம் மனிதர்கள் செய்யும் வேலைகளையும், மனிதன் யோசித்து செய்யும் வேலைகளையும், கணினி மூலம் மனிதன் செய்யும் வேலைகளையும் ஏஐ மிகவும் சுலபமாக செய்துவிடுகிறது. இதனால், மனிதர்கள் செய்யும் பணி குறைகிறது. வருங்காலத்தில் உலகம் முழுவதும் ஏஐ நம்பிதான் இருக்கும் என்று தோன்றுகிறது. பலரும் இது குறித்து கருத்துக்கள் தெரிவிக்கும்போது ஒன்றை மட்டும் தெளிவாக கூறுகிறார்கள். அதாவது வரும்காலத்தில் ஏஐயால் மனிதனுக்கு வேலை வாய்ப்பு என்பதே மிகவும் குறைந்துவிடும் என்று சொல்கிறார்கள்.
இப்படியான நிலையில், மைக்ரோசாப்ட் தற்போது புதிய AI கருவியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது மருத்துவர் கூறும் குறிப்புகளை எடுத்துக் கொண்டு அதன் பின்னர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய வரை முறைகளை வகுத்து தருகிறது. இதனால் இனி நோயாளி பற்றிய குறிப்பு எடுப்பதற்கு நர்ஸ் அல்லது அவருக்கு இணையான இன்னொருவர் தேவைப்படாது என்றும் டாக்டரே AI உதவி மூலம் நோயாளிகளின் முழு விவரத்தை பதிவு செய்து வைத்துக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
இதன் பெயர் Dragon Copilot. டாக்டர்கள் ஒரு நோயாளியை சோதனை செய்யும் போது நோயாளியின் தகவல்களை அருகில் இருக்கும் நர்ஸ் ஒருவர் குறிப்பு எடுத்துக் கொள்வார். பின்னர் அந்த குறிப்புகளை ஆய்வு செய்து அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கலாம் என்று டாக்டர்கள் முடிவு செய்வார்கள். ஆனால், இனி அந்த வேலையை ஏஐயே பார்த்துக்கொள்ளும்.