அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு! ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கருத்து!

அதிமுக
அதிமுக

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்டப்படி செல்லாது என முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.அதிமுக பொதுச் செயலாளருக்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் அணி இந்த அறிவிப்பு செல்லாது எனத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் கூறுகையில், “இந்த அறிவிப்பு சட்டப்படி செல்லாது. தேர்தல் ஆணைய பிரமாண பத்திரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் என்றுதான் இதுவரை உள்ளது. உச்சநீதிமன்றம் தீர்மானம் செல்லும் என்று சொல்லவில்லை. ஆனால், அவசர கோலத்தில் அரசியல் மோசடியை செய்ய முயற்சிக்கிறார்கள். இடைக்கால பொதுச் செயலாளர் என கையெழுத்திட்டு உறுப்பினர் அட்டை கொடுப்பது மோசடி. பதவி போதையில் என்ன செய்வதென்று தெரியாமல் செய்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

ADMK
ADMK

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “கட்சியின் விதிகளுக்கு உட்பட்டே பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துகிறோம். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தேர்தல் குறித்து பேச தகுதியில்லை” என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல்

வரும் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் மார்ச் 18ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 19 ஞாயிற்றுக்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு பரிசீலனை மார்ச் 20ம் தேதியாகும்.

வேட்பு மனு திரும்ப பெறுதல் மார்ச் 21 கடைசி நாளாகும். வாக்குப்பதிவு மார்ச் 26 அன்று நடைபெற்றது மார்ச் 27ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. போட்டியிட விரும்புவோர் தலைமைக் கழகத்தில் ரூ.25000 செலுத்தி விருப்ப மனு பெறலாம். மார்ச் 26ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com