ஏர்டெல் அறிமுகப்படுத்திய புதிய திட்டங்கள்!!

Airtel
Airtel
Published on

ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த அவ்வப்போது நல்ல திட்டங்களை கொண்டு வருகிறது. அதேபோல்தான் தற்போது புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

மிகவும் முக்கியமான சிம்களில் ஒன்றுதான் ஏர்டெல். இது இந்தியா உட்பட 18 நாடுகளில் செயல்படுகிறது. ஏர்டெல் மொபைல் தொலைபேசி, பிராட்பேண்ட், டிஜிட்டல் டிவி மற்றும் கட்டண வங்கி போன்ற பல்வேறு சேவைகளை வழங்குகிறது. இந்த நிறுவனம் 1995ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது பலரும் தங்களது போன்களுக்கு ஏர்டெல் சிம்களே பயன்படுத்துகிறார்கள்.

இத்தனை வருடங்களாக தனது பெருமையை இழக்காமல் இருக்க காரணம், ஏர்டெலின் புதிய திட்டங்கள்தான். அந்த சூழ்நிலைக்கேற்ப, மக்கள் எதை விரும்பிப் பார்க்கிறார்கள் என்பதெற்கேற்ப திட்டங்களை அறிமுகப்படுத்தும்.

இந்த புதிய திட்டத்தில் 4 சிம்கள், இலவச  டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற கால் அழைப்புகள் வசதியுடன் நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட் ஸ்டார் உட்பட பல ஓடிடிகளும் இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் திட்டமான 1399 ரூபாய் குறித்துப் பார்ப்போம்: இது ஒரு குடும்பத் திட்டம். 4 சிம்கார்டுகள், முதன்மை சிம்முக்கு 150 ஜிபி டேட்டா தரவு, 100 எஸ்.எம்.எஸ் தினமும் மற்றும் வரம்பற்ற அழைப்புகள் வழங்கப்படுகின்றன. கூடுதல் சிம்களுக்கு, ஒவ்வொன்றிற்கும் 30 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்துடன் நெட்பிளிக்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் ஆப்பிள் டிவி, ஆப்பிள் மியூசிக், அமேசான் ப்ரைம் மொபைல்  6 மாத கால சலுகையும், ஜியோ ஹாட்ஸ்டார் ஒரு ஆண்டு சலுகையும் கிடைக்கும்.

இரண்டாவதாக 1749 ரூபாய் திட்டம்: இதில் 5 சிம்கார்டுகள், முதன்மை சிம்முக்கு 200 ஜிபி டேட்டா வழங்கப்படும், மேலும் கூடுதல் சிம்களுக்கு ஒவ்வொன்றிற்கும் 30 ஜிபி டேட்டா கிடைக்கும். பயனர்கள் வரம்பற்ற குரல் அழைப்புகள், 100 எஸ்.எம்.எஸ் தினமும் பெறலாம். 6 ஓடிடி தளங்கள். நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் மொபைல் கிடைக்கும், அதேபோல் (6 மாதங்கள்), ஆப்பிள் டிவி, ஆப்பிள் மியூசிக்,  மற்றும் ஒரு வருடத்திற்கு ஜியோ ஹாட்ஸ்டார் கிடைக்கும்,

இதையும் படியுங்கள்:
வெடித்து சிதறிய ஸ்டார்ஷிப்… சோதனைப் பயணத்தின் பதைபதைக்கும் வீடியோ! 
Airtel

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com