ஏர்டெல் பயனாளரா நீங்கள்..? உங்களுக்கு 6 மாதத்திற்கு FREE..!

Airtel
Airtel
Published on

ஜியோ-க்கு போட்டியாக பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது பல இலவசங்கை அள்ளி கொடுத்த வண்ணமாக உள்ளது.தொலைதொடர்பு ஜாம்பவான் ஏர்டெல் தனது செயலியின் வழியாக பல இலவசங்களை அள்ளி கொடுத்து வருகிறது. இதில் Airtel Xstream App premium, ZEE5, HOOQ, Eros Now & ALT Balaji.மற்றும் 350+ Live TV channels, 10000+ movies & TV shows, etc...., போன்றவற்றை தங்களது பயனாளர்களுக்கு இலவசமாக கொடுத்து வருகிறது.

இந்நிலையில் ஏர்டெல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பில் ஆப்பிள் மியூசிக் சலுகையை அறிவித்துள்ளது.6 மாத இலவச Apple Music சேவையை ஏர்டெல் நிறுவனம் வழங்க முடிவு செய்துள்ளது.இந்த சலுகையின் மூலம், ஏர்டெல் ப்ரீபெய்டு பயனர்கள் ஆறு மாதங்களுக்கு எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் ஆப்பிள் மியூசிக்கை அனுபவிக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
மிஸ் யுனிவெர்ஸ் இந்தியா பட்டத்தை வென்ற ராஜஸ்தான் பெண்! யார் இவர்?
Airtel

6 மாதங்கள் என்கிற இலவச காலம் முடிந்ததும், வாடிக்கையாளர் அதை ரத்து செய்யாவிட்டால், சந்தா மாதத்திற்கு ரூ.119 என்ற நிலையான கட்டணத்தில் தானாகவே புதுப்பிக்கப்படும். ரூ.119 x 6 மாதங்கள் = ரூ.714 மதிப்பிலான சேவையை ஏர்டெல் இலவசமாக வழங்குகிறது. ஆப்பிள் மியூசிக் ஆப்பில் 100 மில்லியனுக்கும் அதிகமான பாடல்கள் உள்ளது.

ஏர்டெல் தனது திட்டங்களுடன் பிரீமியம் சேவைகளை இணைப்பது இது முதல் முறை அல்ல. நிறுவனம் ஏற்கனவே வரம்பற்ற 5G டேட்டாவைத் தவிர, நெட்ஃபிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் உள்ளிட்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்குகளை வழங்குகிறது.

ஏர்டெல் சமீபத்தில் பெர்ப்ளெக்சிட்டி AI உடன் கூட்டு சேர்ந்து, அதன் பிரீமியம் AI சேவைக்கு இலவச அணுகலை வழங்குகிறது. ஆப்பிள் மியூசிக்கை ப்ரீபெய்டு பயனர்களுக்கு விரிவுபடுத்துவதன் மூலம், ஏர்டெல் மிகவும் போட்டி நிறைந்த தொலைத்தொடர்பு சந்தையில் தன்னை தனித்து நிற்க முயற்சிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com