மிஸ் யுனிவெர்ஸ் இந்தியா பட்டத்தை வென்ற ராஜஸ்தான் பெண்! யார் இவர்?

Miss universe India
Miss universe India
Published on

ஜெய்ப்பூரில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 போட்டியில் ராஜஸ்தானைச் சேர்ந்த மனிகா விஸ்வகர்மா அழகிப் பட்டத்தை வென்றுள்ளார். இவர் ரியா சிங்காவுக்குப் பிறகு இந்த பட்டத்தை வென்றவர். இந்த வெற்றியின் மூலம், நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெறவுள்ள 74வது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் மனிகா இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்.

இந்தப் போட்டியில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தான்யா ஷர்மா முதல் ரன்னர்-அப் ஆகவும், ஹரியானாவைச் சேர்ந்த மெஹக் திங்ரா இரண்டாவது ரன்னர்-அப் ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மனிகா விஸ்வகர்மா யார்?

ராஜஸ்தானின் ஸ்ரீகங்கானகரில் பிறந்த 23 வயதான மனிகா, தற்போது அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் இறுதியாண்டு படித்து வருகிறார். மிஸ் யுனிவர்ஸ் ராஜஸ்தான் 2024 பட்டத்தை வென்றவர். வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சார்பாக BIMSTEC Sewocon-ல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இவர் ஒரு NCC பட்டதாரி, பாரம்பரிய நடனக் கலைஞர் மற்றும் ஓவியர். லலித் கலா அகாடமி மற்றும் ஜே.ஜே. ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் போன்ற நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

மனநல குறைபாடுகள் பற்றிய புரிதலை அதிகரிக்க நியூரோனோவா (Neuronova) என்ற அமைப்பை நிறுவியுள்ளார். ADHD போன்ற குறைபாடுகளை பலமாக பார்க்க வேண்டும் என்பதே இவரது நோக்கம்.

தான்யா ஷர்மா யார்?

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான தான்யா, நடிகை மற்றும் மாடல். டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் உளவியல் பட்டம் பெற்றுள்ளார். தேசிய அளவில் ஜாஸ், ஹிப்-ஹாப் மற்றும் பாலிவுட் நடனங்களில் பயிற்சி பெற்றவர். தனது பல்கலைக்கழகத்தின் நடனச் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.

10 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பு உலகிற்கு வந்த இவர், நாடகம், தொலைக்காட்சி விளம்பரங்கள், ஃபேஷன் ஷோக்கள் மற்றும் TEDx மேடைகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். பிரபல ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா உள்ளிட்டோரின் மாடலாகவும் பணியாற்றியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
இட்லி, தோசை முதல் ஆம்பாள் வரை! இந்திய உணவுகளின் சிறப்பம்சங்கள்!
Miss universe India

மெஹக் திங்ரா யார்?

டெல்லியில் பிறந்த 19 வயதான மெஹக், ஃபேஷன் மீடியா மற்றும் கம்யூனிகேஷன் மற்றும் உளவியலில் பட்டம் பெற்றுள்ளார்.

ஜாஸ், பாலே, கான்டெம்பரரி மற்றும் பாலிவுட் நடனங்களில் பயிற்சி பெற்றவர். 3 வயதிலிருந்தே நடனம் ஆடத் தொடங்கிய இவர், 12 வயதில் மாடலிங் உலகிற்குள் நுழைந்தார்.

இவர் மாநில அளவிலான ஸ்கேட்டிங் ஹாக்கி வீராங்கனை. விலங்கு நலன் மற்றும் குழந்தைகளுக்கான திட்டங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com