அன்லிமிடெட் 5G-னு சொல்லிட்டு ஹாட்ஸ்பாட் தரமாட்டீங்களா..?- கொதித்தெழும் நெட்டிசன்கள்!

ஹாட்ஸ்பாட் தடையால் தவிக்கும் பயனர்கள்; ஏர்டெல்லின் மறைமுக நிபந்தனைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
5G data are limited
Airtel Ban Hostspot sharing
Updated on

ஏர்டெல் அன்லிமிடெட் 5G டேட்டா உபயோகப்படுத்தும் வாடிக்கையாளர்கள், அதை ஹாட்ஸ்பாட் வழியாக அதை பகிரும் போது மற்றவர்களுக்கு இணையம் வேலை செய்வதில்லை, என்று புகார் தெரிவித்துள்ளனர். சமூக வலைதள பிரபலமான டிப்ஸ்டர் உட்சவ் டெக்கி என்பவர் , தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தார்.

அதில், "ஏர்டெல் வழங்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வாடிக்கையாளர்கள் மொபைல் ஹாட்ஸ்பாட் வழியாக , வேறு யாருக்கும் பகிர முடியாது என்ற தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது" என்பதை சுட்டிக்காட்டி இருந்தார். ஏர்டெல் வழங்கும் சலுகைகள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்றும் விளக்கியிருந்தார்.

அவரது பதிவு வைரலான பிறகு ஏராளமான பயனர்களும் தங்களுக்கு அந்த ஹாட்ஸ்பாட் கட்டுப்பாடு குறித்து எதுவும் தெரியாது என்றும், ஏர்டெல்லின் அன்லிமிடெட் 5 ஜி திட்டங்கள் விளம்பரப்படுத்தப்படும் போது அதில் உள்ள நிபந்தனைகள் மற்றும் செயல்முறைகளை தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஏர்டெல் குறிப்பிட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி, மொபைல் ஹாட்ஸ்பாட்டைப் பயன்படுத்தி அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டத்தை மற்ற சாதனங்களுடன் பகிர முடியாது. ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது. ஏர்டெல் 5ஜி கிடைக்கும் இடங்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை மொபைலில் மட்டுமே பயன்படுத்த முடியும். அதிலுள்ள கட்டுப்பாடுகளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

சில ஏர்டெல் 5ஜி திட்டங்களில் வழங்கப்படும் டேட்டாக்கள் அன்லிமிடெட் (வரம்பற்றவை) என்று விளம்பரப்படுத்தினாலும் உண்மையில் அவை அப்படி இருப்பதில்லை. அந்தத் திட்டங்களில் மறைமுகமான பயன்பாட்டு வரம்புகள் இருப்பதையும் ஒரு சில வாடிக்கையாளர்கள் கண்டறிந்து உள்ளனர். கரண் ஷெராஃப் என்ற ஒரு ஏர்டெல் பயனர் , சமீபத்தில் தனது ₹399 ப்ரீபெய்ட் திட்டத்தில் 5ஜிடேட்டா பயன்பாடு குறித்து ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து தான் பெற்ற ஒரு மின்னஞ்சலையும் பகிர்ந்திருந்தார்.

5G datas are banned Hotspot sharing
Airtel unlimited datas are limited airtel

அந்த மின்னஞ்சலின்படி ₹399 திட்டத்தில் அன்லிமிடெட் 4ஜி ,5ஜி டேட்டா வழங்கப்படுகிறது. ஆனாலும் அதில் குறிப்பிட்டுள்ள 300GB டேட்டாவை 30 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அதை தாண்டி பயன்படுத்தினால் அது வணிகப் பயன்பாடாக கருதப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.திட்டங்களில் அன்லிமிடெட் என்று குறிப்பிட்டு வாடிக்கையாளர்களுக்கு விற்கின்றனர். ஆனால் , உண்மையில் டேட்டாக்கள் வரம்பற்றதாக இருக்கவில்லை. அன்லிமிடெட் என்று கூறி விற்பனை செய்வதால் ,அந்த பயன்பாட்டிற்கு எந்தவொரு வரமும் இருக்கக்கூடாது என்று வாடிக்கையாளர்கள் பலரும் கருதுகின்றனர்.

ஏர்டெல்லின் இந்த செயல்பாட்டினால் பலரும் சமூக வலைதளங்களில் கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். மொபைல் ஹாட்ஸ்பாட் மூலம் பகிர முடியாத 5G டேட்டாவை எப்படி அன்லிமிடெட் என்று விளம்பரம் செய்ய முடியும்? இது வரம்புடையது என்று தானே விளம்பரம் செய்ய வேண்டும், என்று ஒரு சமூக வலைதளப் பயனர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு பயனர் தாங்கள் லேப்டாப்பில் செய்யும் பணிக்காக , ஒரு சில நேரம் மொபைல் ஹாட்ஸ்பாட்டை நம்பி இருப்பதாக தெரிவித்திருந்தார். அன்லிமிடெட் டேட்டாவிற்கு பணம் செலவழித்தாலும் ஹாட்ஸ்பாட் பயன்பாட்டை தடுப்பது அந்த திட்டத்தின் பலனை கிடைக்க விடுவதில்லை என்று கூறியுள்ளார். அனைத்து மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களும் வரம்பற்ற டேட்டாக்கள் என்று விளம்பரம் செய்தாலும் அவை குறிப்பிட்ட அளவு மட்டுமே வேகமாக இயங்கும் , அந்த அளவை தாண்டி விட்டால் இணையத்தின் வேகம் பெரிய அளவில் குறைக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு கடிவாளம் : இனி சென்சார் கட்டாயம்!
5G data are limited
இதையும் படியுங்கள்:
மொபைலில் பார்த்தால் மேஜிக் கிடைக்காது! இந்த படங்களை தியேட்டர்ல போய் பாருங்க!
5G data are limited
logo
Kalki Online
kalkionline.com