அடேங்கப்பா! 19 நாட்களில் 55 மில்லியன் ஸ்பேம் கால்களை கண்டறிந்த Airtel-ன் AI!

Spam Call
Spam Call
Published on

செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் ஏர்டெல் தற்போது வெறும் 19 நாட்களில் 55 மில்லியன் ஸ்பேம் அழைப்புகளையும் மெசேஜ்களையும் வெற்றிகரமாக கண்டறிந்துள்ளது.

நாம் ஒரு முக்கியமான வேலைகளில் இருக்கும்போதுதான் சரியாக இந்த ஸ்பேம் கால்கள் வரும். இது வாங்குகிறீர்களா அது வாங்குகிறீர்களா என்று நம்மை எதாவது வாங்க வைக்க அதிக நேரம் பேசுவார்கள். வேண்டாம் என்று கூறினாலும் நம்மை அவர்களின் பொருட்களை வாங்கத் தூண்டுவார்கள். இதுமாதிரியான ஸ்பேம்  கால்கள் அடிக்கடி வரும். ஒருவருக்கே ஒரு நாளில் அத்தனை முறை ஸ்பேம் கால்கள் வரும்.

அப்படியிருக்கும்போது ஏர்டெல் பயன்படுத்தும் அனைவருக்கும் எத்தனை கால்கள் வரும். அதைதான் ஏர்டெலின் ஏஐ கணக்கிட்டுள்ளது.

கேரளாவில் மட்டுமே 55 மில்லியனுக்கும் அதிகமான சாத்தியமான ஸ்பேம் அழைப்புகளையும், ஒரு மில்லியன் ஸ்பேம் எஸ்எம்எஸ்களையும் வெற்றிகரமாகக் கண்டறிந்துள்ளது. இந்த திட்டம் தொடங்கப்பட்ட 19 நாட்களுக்குள் இத்தனை ஸ்பேம் கால்கள் பதிவானது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு பயங்கரமான விஷயம் என்னவென்றால், பொருட்களை விற்பதாக கூறி பழைய பொருட்களையோ உடைந்த பொருட்களையோ கொடுத்து வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணம் பறிக்கின்றனர். அதேபோல், திட்டங்களை எதாவது கூறி 5000 கட்டுனீர்கள் என்றால் 5 லட்சம் கொடுக்கப்படும் என்று சொல்லியும் பணம் பறிக்கிறார்கள்.

இதனை தடுக்கும் விதமாகத்தான் ஏர்டெல் இந்த முயற்சியை செய்து வருகிறது. 8.8 மில்லியன் வாடிக்கையாளர்களை காப்பாற்றும் விதமாக ஏர்டெல் இதுபோல் செயலாற்றி வருகிறது.

இதுகுறித்து ஏர்டெல்லின் தலைமை இயக்க அதிகாரி (கேரளா) அமித் குப்தா, பேசுகையில் “கேரளாவில் உள்ள அனைத்து ஏர்டெல் மொபைல் பயனர்களும் இப்போது தானாகவே இந்த இலவச தீர்வுகளை அணுக முடியும். இதற்கு ஆப்ஸ் பதிவிறக்கமும் தேவையில்லை.

இதையும் படியுங்கள்:
வெளிநாட்டு தலையீட்டு ஆணையத்தில் இந்தியா குறித்து முறையிடவுள்ள கனடா!
Spam Call

மொபைல் பயனர்கள் மோசடிகள், மோசடி மற்றும் தீங்கிழைக்கும் தகவல்தொடர்புகளில் அதிகளவில் சிக்கிக்கொள்கிறார்கள். இந்தச் செயல்பாடுகள் இந்தியாவில் உள்ள நெட்வொர்க்குகள் முழுவதும் ₹170 கோடி இழப்புக்கு வழிவகுத்துள்ளன. இது கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும். சந்தேகத்திற்குரிய ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களை கணினி துல்லியமாகக் கண்டுபிடித்துவிடுகிறது. நெட்வொர்க்குகள் முழுவதும் வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வை உருவாக்குவதில் ஏர்டெல் முன்னணியில் உள்ளது,” என்று பேசியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com