

உலகப் புகழ்பெற்ற ஆன்மீக குரு ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் நூற்றாண்டு விழா, ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த பிரமாண்டமான விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், மத்திய அமைச்சர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரம் ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்ட ஏராளமான முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
மனிதநேயமே ஒரே ஜாதி - ஐஸ்வர்யாவின் உரை
விழாவில் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், சாதி மற்றும் மதம் குறித்து சக்திவாய்ந்ததொரு உரையை நிகழ்த்தினார். அவரது வார்த்தைகள் அங்கிருந்த அனைவரும் கரகோஷம் எழுப்பி வரவேற்கப்பட்டது.
ஐஸ்வர்யாவின் உரை வரிகள்:
"இங்கு ஒரே ஒரு ஜாதிதான் உள்ளது, அது மனிதநேயத்தின் ஜாதி. ஒரே ஒரு மதம்தான் உள்ளது, அது அன்பின் மதம். ஒரே ஒரு மொழியே உள்ளது, அது இதயத்தின் மொழி. ஒரே ஒரு கடவுளே இருக்கிறார், அவர் எங்கும் நிறைந்திருக்கிறார்."
என்று ஐஸ்வர்யா உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.
மோடியின் காலைத் தொட்டு ஆசி
உரையை முடித்த பிறகு, ஐஸ்வர்யா ராய் பச்சன் செய்த செயல் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்ததுடன், சமூக வலைதளங்களில் வைரலானது.
அவர் மிகுந்த மரியாதையுடன் பிரதமர் நரேந்திர மோடியின் பாதங்களைத் தொட்டு ஆசி பெற்றார்.
பிரதமர் மோடி அவரது தலையில் கையை வைத்து வாழ்த்து தெரிவித்ததுடன், கைகளைக் கூப்பி நன்றி செலுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த சிறப்புமிக்க நிகழ்வுக்காக ஐஸ்வர்யா ராய் மஞ்சள் நிற எத்னிக் உடையணிந்து வந்திருந்தார்.
பிரதமரின் வருகை குறித்துப் பேசிய ஐஸ்வர்யா ராய், "பிரதமர் அவர்களே, இன்று நீங்கள் இங்கு வந்திருப்பது எங்களுக்குப் பெருமை. 'மக்கள் சேவையே மகேசன் சேவை' (மக்களுக்குச் செய்யும் சேவையே கடவுளுக்குச் செய்யும் சேவை) என்று பாபா கூறியதை, உங்களின் இந்த வருகை எங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்துகிறது. உண்மையான தலைமைத்துவம் என்பது மக்களுக்குச் சேவை செய்வதுதான்," என்று எளிமையாக விளக்கினார்.