அடுத்த ரேஸிங்கிற்கு தயாராகும் அஜித்..!

ajith racing
Ajith racingsource:Dailythanthi
Updated on

இத்தாலியில் நடைபெற்ற ஐரோப்பிய அளவிலான தொடரில் அஜித்துடைய அணி 9வது இடத்தை பிடித்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஸ்பெயினில் நடைபெற இருக்கும் புகழ்பெற்ற 'லீ மான்ஸ்' கோப்பை பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி பங்கேற்பதற்காக தீவிரமாகத் தயாராகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான அஜீத் தற்பொழுது கார்பந்தய ரேசிலும் உலக அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அஜித்குமார் ரேசிங் என்ற தன்னுடைய சொந்த அணியின் மூலம் பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே துபாய், பெல்ஜியம், அபுதாபி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நடந்த போட்டிகளில் இவருடைய அணி வெற்றிகளைக் குவித்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக இத்தாலியில் நடைபெற்ற ஐரோப்பிய அளவிலான தொடரில் இவர்களுடைய அணி 9வது இடத்தை பிடித்தது. தற்போது ஸ்பெயினில் ஏப்ரல் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெற இருக்கும் லீ மான்ஸ் கோப்பை பந்தயத்தில் பங்கேற்பதற்காக அஜித்குமாரும் அவரது அணியினரும் முழுவீச்சில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள். 

logo
Kalki Online
kalkionline.com