சண்டிகரில் மாணவர்களை எழுப்ப அலாரம் ஓசை: அரசு உத்தரவு!

சண்டிகரில் மாணவர்களை எழுப்ப அலாரம் ஓசை: அரசு உத்தரவு!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

சண்டிகரில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக அதிகாலையில் எழுப்பும் வகையில்  அங்குள்ள கோவில்கள், மசூதிகள் மற்றும் குருத்வாராக்களில் அதிகாலையில், ‘அலாரம்’  ஒலிக்குமாறு ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது. .

ஹரியானா மாநிலத்தில் வருகிற மார்ச் மாதம் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடக்கவுள்ளன.

இத்தேர்வுகளுக்குத் தாயாராகும் வகையில் மாணவர்கள் அதிகாலை 4:30 மணிக்கு எழுந்து படிக்கும் வகையில்,  தங்கள் குழந்தைகளை எழுப்பும் வகையில், திட்டம் வகுக்க வலியுறுத்தி, அனைத்து அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் அம்மாநில கல்வித் துறை கடிதம் அனுப்பியது.

மேலும் மாணவர்கள் விழித்திருந்து படிக்கிறார்களா என்பதை வாட்ஸ்அப் குரூப் மூலம் ஆசிரியர்கள் விசாரிப்பார்கள் என்று பெற்றோர்களுக்கும் தெரிவிக்கப் பட்டது.  இதைத் தொடர்ந்து, மாணவர்களை அதிகாலையில் எழுப்பும் வகையில் கோவில்கள், மசூதிகள் மற்றும் குருத்வாராக்களில் அலாரம் ஒலி எழுப்பி அறிவிப்புகளை வெளியிடுமாறு ஹரியானா அரசு அறிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com