ALL EYES ON RAFAH – இணையத்தை ஆக்கிரமித்தப் பதிவு!

Rafa Post
Rafa Post
Published on

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையேயான போர் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு பல பாலஸ்தீன மக்கள் பலியாகியுள்ளனர். இதன் வீடியோக்கள் வெளியிடப்பட்டன. இதனையடுத்து உலகம் முழுவதும் ALL EYES ON RAFAH என்றப் பதிவு இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.

பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க ஹமாஸ் என்ற அமைப்பு செயல்படுகிறது. ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானில் இருக்கிறது. இந்த இரு அமைப்புகளையும் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத பட்டியலில் இணைத்துள்ளனர். ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதுமுதல், இஸ்ரேல் கொடூரமான பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

அமெரிக்கா கூட போரை நிறுத்துமாறு கூறிவிட்டது. ஆனால், இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என்று சொல்லிவிட்டதால், தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இதில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள், 75% பேர் குழந்தைகள் என பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

இதனையடுத்து ரஃபாவில் இஸ்ரேல் மோசமான தாக்குதலை நடத்தத் திட்டமிட்டது. காசாவின் உள்ளே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், பாலஸ்தீன மக்கள் ரஃபா நோக்கித்தான் நகர்ந்தனர். பின்னர், இந்த பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை திட்டமிட்டப்படி தொடங்கியது. இதனையடுத்து சமீபத்தில், 8 லட்சம் பேர் ரஃபா பகுதியிலிருந்து போர் நடந்து முடிந்த பகுதிகளுக்குச் சென்றனர். 

ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு முதல் இஸ்ரேல் ரஃபா பகுதியில் மோசமான தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்துத் தாக்காமல், பொதுவாக வான்வழி தாக்குதல் நடத்தியதால், பொதுமக்கள் பலர் உயிரோடு எரியும் காட்சி இணையத்தில் பகிரப்பட்டு பதைப்பதைக்கச் செய்கிறது. இதில் குழந்தைகள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனை உலகநாடுகளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

இதையும் படியுங்கள்:
நீரிழிவு நோயை முழுமையாக குணப்படுத்தலாம்... புது மருத்துவ சிகிச்சையை கண்டுபிடித்த சீன மருத்துவர்கள்!
Rafa Post

ஆகையால், ALL EYES ON RAFAH என்று மக்கள் பதிவிட்டு பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகைகள் திரிஷா, சமந்தா உள்ளிட்டோரும் தங்களின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ‛All Eyes On RAFAH' என பதிவிட்டுள்ளனர். இதன்மூலம் அனைவரும் ரஃபா மீதான தாக்குதலை கவனிக்கின்றனர் என்பதை வெளிப்படுத்தும் வகையில், இந்தப் பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து உலகம் முழுவதும் பலர் தங்களின் வலைதள பக்கங்களில் ‛All Eyes On RAFAH' என்பதைப் பதிவிட்டு வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com