நீரிழிவு நோயை முழுமையாக குணப்படுத்தலாம்... புது மருத்துவ சிகிச்சையை கண்டுபிடித்த சீன மருத்துவர்கள்!

Doctors.
Diabetes can be completely cured.

நீரிழிவு நோய்க்கு இதுவரை முழுமையான தீர்வு என்பது கண்டுபிடிக்கப்படாத நிலையில், செல் தெரப்பி எனப்படும் புதுமையான சிகிச்சை முறையைப் பயன்படுத்தி நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபரை குணப்படுத்தி சாதித்துள்ளனர் சீன விஞ்ஞானிகள். 

நாளுக்கு நாள் உலகெங்கிலும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 10 வயதுக்கு உட்பட்டவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவது இந்தியாவில் அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில் சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள புதிய சிகிச்சை முறையானது, பல கோடி மக்களை காப்பாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சீனாவின் தலைசிறந்த மருத்துவ மனைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, கடந்த 2021 ஆம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த நீரிழிவு நோயாளிக்கு செல் டிரான்ஸ்பிளான்ட் அறுவை சிகிச்சை செய்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த அறுவை சிகிச்சை செய்த சில வாரங்களிலேயே அவர் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதை நிறுத்திக் கொண்டார். பின்னர் ஒரு வருடத்தில் அவரது சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், வாய்வழி மருந்துகளை மட்டுமே உட்கொண்டு வந்தார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றின் பயன்பாடுகளையும் குறைத்துக் கொண்டு அவர் தற்போது எந்த மருந்துகளையும் உட்கொள்வதில்லை. 

இந்த சிகிச்சை முறையில் நோயாளியின் கணைய செயல்பாடு சிறப்பாக மாறியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அந்த நோயாளி தொடர்ச்சியாக 33 மாதங்களாக எவ்விதமான மருந்துகளையோ இன்சுலின் ஊசிகளையோ போட்டுக் கொள்வதில்லை. நீரிழிவு நோய் என்பது மிகவும் மோசமான நோயாகும். இதை சரியாக கையாளாவிட்டால், மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதுவரை நீரிழிவு நோய்க்கு மாத்திரைகள் மற்றும் இன்சுலின் ஊசி போடுதல் போன்றவையே பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இதையும் படியுங்கள்:
தினசரி தலைக்கு குளிப்பது நல்லதா? ஜாக்கிரதை! 
Doctors.

சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள செல் தரப்பியின் செலவுகள் அதிகமாக இருந்தாலும், நீரிழிவு நோய்க்கான நிரந்தர தீர்வு என்பது மருத்துவத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். இந்த சிகிச்சை முறையில் நோயாளியின் Peripheral Blood Mononuclear செல்களை மறுவடிவமைத்து, அவற்றை Seed செல்களாக மாற்றி கணையத் திசுக்களை மீண்டும் பழையபடி இயங்கச் செய்கின்றனர். 

இந்த புதிய சிகிச்சை முறையால், எதிர்காலத்தில் நீரிழிவு நோயாளிகளே இல்லாத நிலை ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com